விஜய் டிவியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சுவாரஸ்யமான தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். மற்ற தொடர்களைப் போல இந்த தொடரில் பெரிய வில்லத்தனங்கள் ஏதுமில்லை, ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் கதைக்களங்களை வைத்தே இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஹீரோ தமிழின் தாயார் கோதை. இவர் தான் முக்கியமான கதாபாத்திரம். இவர் பெயரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இவருக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் தமிழ். இரண்டாவது மகன் கார்த்திக். இதில் தமிழின் மனைவி தான் சரஸ்வதி. கார்த்திக்கின் மனைவி வசுந்தரா. வசுந்தராவின் தாய் ஒரு ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ஆவார். இந்த கதையில் வில்லத்தனங்களை செய்து வருவது வசுந்தராவின் தாயாரான ஓய்வு பெற்ற துணை கலெக்டர் சந்திரகலா தான். தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் வில்லத்தனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது கதைப்படி வசுந்தரா கர்ப்பமாக இருக்கிறார். கார்த்திக்கும் வசுந்தராவும் சேர வேண்டும் என்று தமிழும் சரஸ்வதியும் மிகுந்த முயற்சி எடுத்தனர். அதன் பலனாக வசுந்தரா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சி அடைகிறது. நேற்றைய எபிசோடில் வசுந்தரா வயிற்றில் குழந்தை வளர்கிறது என்ற செய்தியை வீட்டில் உள்ள அனைவருக்கும் சரஸ்வதி தான் தெரியப்படுத்துகிறார். இதற்காக அவர் இனிப்புகளை செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது வசந்தரா, கோதையிடம் நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பியது சரஸ்வதி தான். அவருக்கு தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். இதனால் குடும்பமே நெகிழ்ச்சியில் திளைக்கிறது. தற்போது இந்த செய்தி வசுந்தராவின் தாய் சந்திர கலாவிற்கு தெரிய வருகிறது.

இருந்து வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் சந்திர கலாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது சந்திரகலா சரஸ்வதியிடம் உனக்கு குழந்தை இல்லை, எனவே நீ வசுந்தரா பக்கத்தில் நிற்க வேண்டாம் என்று அனுப்பி விடுகிறார். இதனால் தமிழும் சரஸ்வதியும் சமையலறையில் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹாலில் வசுந்தரா அனைவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார். முதலில் தன் மாமனார், மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்பு தமிழ் மற்றும் சரஸ்வதி இடம்தான் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று வசு கூறுகிறார். பின்னர் வேறு வழியில்லாமல் சமையலறைக்குச் சென்று சரஸ்வதி மற்றும் தமிழை அழைத்து வருகிறார் சந்திரகலா. என்னதான் சரஸ்வதிக்கு வசுந்தராவின் தாயார் தீங்கு செய்தாலும், வசுந்தரா என்றைக்கும் சரஸ்வதி மீது அன்பு குறையாமலே இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the video below…
Youtube Video Code Embed Credits: Vijay Television