வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட்

வெந்து தணிந்தது காடு படத்திற்கு சூர்யா தொடங்கிய பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். இவர் பிரபல இயக்குனர் டி.ஆரின் மூத்த மகன் ஆவார். தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு தன்னுடைய திறமையால் இன்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைவாக இருந்தது. பின்னர் உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு என்ற வெற்றி படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. பின்னர் அவர் கௌதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பத்து தல என்ற படத்தை கைவசம் வைத்திருக்கிறார்.

வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 1 வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 3

விளம்பரம்

இன்று வெந்து தணிந்தது காடு படம் காலை 4:00 மணிக்கே வெளியானது. இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்கினி குஞ்சொன்று கண்டேன் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய வெற்றி படங்களில் சிம்பு நடித்திருந்தார். எனவே வெந்து தணிந்தது காடு படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலர் படம் நன்றாக இருக்கிறது, ஆனால் மெதுவாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். தற்போது சிம்புவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  மிகவும் எதிர்பார்க்கப்படும் அவதார் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது

வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 5 வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 7 வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 9

விளம்பரம்

சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வெந்து தணிந்தது காடு பற்றி பல நல்ல ரிவூஸ்களை கேட்க முடிகிறது. படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். கௌதமுக்கும் சிம்புவுக்கும் ஏ ஆர் ரகுமான் சாருக்கும் பெஸ்ட் விஷஸ் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன் சிம்புவிற்க்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் வெந்து தணிந்தது காடு குழுவினருக்கும் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும், ஏ ஆர் ரகுமான் சாருக்கு மிக்க நன்றி குறிப்பாக ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடல் மிக நன்றாக இருக்கிறது தான் அதை விரும்புவதாக பதிவிட்டு இருக்கிறார்.

வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 11 வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 13 வாழ்த்து மழையில் சிம்பு..! அனைவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் 15

விளம்பரம்

இவர்களைப் போலவே கார்த்திக், விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், காமெடி நடிகர் சூரி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் சிம்புவின் நண்பர் மகத், நடிகர் கிருஷ்ணா இசையமைப்பாளர் தமன் போன்றவர் பல திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சிம்பு தனித்தனியாக தனது நன்றியை தெரிவித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவிற்கு நன்றி அண்ணா என்றும், உதயநிதிக்கு உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி அண்ணா என்றும் சிம்பு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment