ஹேர்ஸ்டைலை மாத்துன அப்புறம் செம்ம அழகா மாறிட்டாங்களே அதிதி.!

இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் தற்போது போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளையமகள் தான் அதிதி சங்கர். இவர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருந்த போதிலும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் சினிமா துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். இவரின் முதல் படமே கார்த்திக் உடன் விருமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. மேலும் அதிதியின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர. தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திருக்கிறார் அதிதி. விருமன் படத்தில் இவர் பாவாடை தாவணியில் ஒரு பக்கா கிராமத்து பெண்ணாக தோன்றியதால் பலரும் இவருக்கு ரசிகர்களாகி போயினர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஹேர்ஸ்டைலை மாத்துன அப்புறம் செம்ம அழகா மாறிட்டாங்களே அதிதி.! 1

விளம்பரம்

அதிதி 5 வயதில் இருந்தே முறையாக இசை மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றை கற்று வருகிறார். கர்நாடக இசை மட்டுமல்லாமல் வெஸ்டர்ன், இந்துஸ்தானி போன்ற மேற்கத்திய இசைகளையும் அவர் கற்றுள்ளார். இதனால் அவருக்கு நடனம் பாடல்கள் எல்லாமே அத்துபடி. செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு போட்டியில் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை பாடி பலரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். இந்த பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. அதிதியைப் போலவே நடனமாடி பலரும் ரீல்ஸ் செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.மேலும் இவரது குரல் வளமும் நன்றாக இருப்பதால் பாடலிலும் அசத்தி வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் அதிதி சங்கர்.

தொடர்புடையவை  இந்தியன்-2 படத்தில் 90 வயது முதியவர் கமல்ஹாசன்! வர்ம சண்டை பயிற்சி!!

ஹேர்ஸ்டைலை மாத்துன அப்புறம் செம்ம அழகா மாறிட்டாங்களே அதிதி.! 3

விளம்பரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படமான மாவீரன் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதிதி துருதுருவென இவர் செய்யும் சேட்டைகள் மேடைகளில் பார்ப்பதற்கே மிக நன்றாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment