கலர்ஸ் டிவியை நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளிப்படையாக விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. பின்னர் இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தனக்கு மதிப்பில்லை, தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று ரட்சிதா வெளிப்படையாக அறிவித்துவிட்டு விஜய் டிவியிலிருந்து விலகினார். பின்னர் இவருக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “இது சொல்ல மறந்த கதை” என்ற நாடகத்தில் கமிட்டானார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்குப் பிறகு அவர் கதாநாயகியாக இந்த தொடரில் தான் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான ப்ரோமோவில் இந்த தொடர் முடிய இருப்பதாக வெளியானது.

இந்த சீரியல் ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆன நிலையில் சீரியல் முடிக்க இருப்பதாக வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். இந்த நிலையில் ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை பதிவிட்டுள்ளார். அதில்,

இது சொல்ல மறந்த கதையின் தொடரில் சாதனா கதாபாத்திரம் இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கருத்து ஆழம் மிக்க சீரியலை முடித்ததற்காக வாழ்த்துக்கள் கலர்ஸ் தமிழ்.

இந்த ப்ராஜக்ட்டை செலக்ட் பண்ணாதீர்கள் என்று என்னை பார்த்து சிரித்த மக்கள் பலரையும் நான் திட்டிவிட்டு இந்த சீரியலில் கமிட்டானேன். நான் தான் தப்பான முடிவு எடுத்துள்ளேன் என்பதை கலர்ஸ் தமிழ் உணர்த்தி விட்டீர்கள். இதற்காக வெட்கப்படுகிறேன்.

உங்களுடைய ஃபேக் ப்ரோமோஷன் இல் இருந்து இனிமேல் ஃப்ரீயாக இருக்கலாம். உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.

சீரியலை ஜஸ்ட் லைக் தட் ஆக முடித்ததற்காக வெட்கப்படுகிறேன். உங்களுடைய குறைகளை நடிகர்கள் மேல் போடாதீர்கள். நீங்கள் பண்ண வரைக்கும் போதும் கலர்ஸ் டிவி நல்லா இருங்க. முடிக்க தேவையே இல்லாத சீரியலை முடிச்சு வச்சிருக்கீங்க. அதனால் உங்களுக்கு பாராட்டுகள். என்றெல்லாம் மிகக் காட்டமாக தனது instagram ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார் ரட்சிதா.

ஆனால் கலர்ஸ் தமிழ் சேனல் தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.