தங்கை மகனுடன் கார் ரேஸ் விளையாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .! ஐஸ் வெளியிட்ட அழகிய வீடியோ

தங்கை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பொழுது, தங்கையின் மகனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கவனித்துக் கொள்ளும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் ஐஸ்வர்யாவை இப்படி பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்கள்தான் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா. இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்த நிலையில், லிங்காவின் பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்காக மீண்டும் இருவரும் இணைந்தனர். ஆனால் அதன் பின்னர் ஐஸ்வர்யாவும் தனுஷும் எங்கும் சந்தித்துக் கொள்ளவில்லை.

தங்கை மகனுடன் கார் ரேஸ் விளையாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .! ஐஸ் வெளியிட்ட அழகிய வீடியோ 1

விளம்பரம்

ஆனால் அவ்வப்போது தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்திராவை அப்பா தனுசை பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தனது தங்கை சௌந்தர்யாவிற்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறார். சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிய விவாகரத்தான நிலையில், 2019-ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவர் உடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவதாகவும் ஒரு மகன் பிறந்திருக்கிறார். அவருக்கு வீர் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் சௌந்தர்யா. மேலும் அவர் தனது குட்டி மகனுடன் ரஜினிகாந்த் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடையவை  அன்ஷிதா கதையை கேட்டு கதறி அழுத போட்டியாளர்கள்..! Bigg Boss Promo..!

தங்கை மகனுடன் கார் ரேஸ் விளையாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .! ஐஸ் வெளியிட்ட அழகிய வீடியோ 3

விளம்பரம்

சௌந்தர்யாவின் மூத்த மகன் வேத்துடன் கார் விளையாடிக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. மேலும் தான் பெரியம்மாவாக இந்த வேலையை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், தங்கை மகன் தனக்கு கார் ஓட்டுவது எப்படி என்று இரவு நேரங்களில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் நீ ஒரு அறிவான குழந்தையை பெற்றிருக்கிறாய் என்று தங்கையை டேக் செய்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த பலரும் தலைவர் பேரன் ஸ்மார்ட்டா இல்லாம எப்படி இருப்பான் என்றும், உங்களை இதுபோல பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது ஐஸ்வர்யா என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

தங்கை மகனுடன் கார் ரேஸ் விளையாடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .! ஐஸ் வெளியிட்ட அழகிய வீடியோ 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment