நடிகை அதிதி சங்கர் தற்போது ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் தான் அதிதி. மருத்துவராக பட்டம் பெற்றுள்ள போதிலும் சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தினால் திரைத்துறைக்கு வந்த இவர் தற்போது விருமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தன்னுடைய முதல் படமே கார்த்திக் போன்ற பெரிய நடிகருடன் நடித்து முடித்துள்ள அதிதி, இரண்டாவதாக தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைய ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். முதல் படம் இரண்டு படங்களுமே மிகப்பெரிய நடிகர்களுடன் என்பதால் இவருக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்தது என்று இவர் மீது விமர்சனங்களும் எழுந்தது.

அதிதி சங்கர் நடிப்பது மட்டுமில்லாமல் பாடுவது, பரதநாட்டியம் என பல்வேறு துறைகளிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். இவர் கர்நாடக சங்கீதத்துடன் வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி போன்ற இசைகளையும் கற்றுத் தேர்ந்தவராக இருக்கிறார். மேலும் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலிலும் பரதநாட்டியம் ஆடி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதிதி முதல்முறையாக வருண் தேஜ் நடித்த தெலுங்கு படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை பாடி முதல் முறையாக பாடகியாக அறிமுகமானார். அப்போதே அந்தப் பாடலுக்காக அவருக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்தது. தற்போது விருமன் படத்திலும் மதுரவீரன் படத்து பாடலுக்காக அவருக்கு விமர்சனங்கள் கிடைத்தது.

இந்தப் பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடியிருந்தார். ஆனால் அதை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால் அதிதி இதற்கெல்லாம் சரியான பதில் கொடுத்திருந்தார். திறமை இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும். யாரும் தமக்கு சும்மா தூக்கி தரவில்லை என்று காட்டமான பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அதிதி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் போட்டோக்கள் வீடியோக்களை என பதிவிட்டு மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு போட்டோ சூட்டை நடத்தி அதையும் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அதிதி இன்று பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரம்மாண்டமாக ஒரு உடைய அணிந்து, அதில் அவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களில் அவர் தேவதை போல் இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
