காலில் விழுந்து கதறி அழும் ராமமூர்த்தி.! தந்தையை அசிங்கப்படுத்திய கோபி.! இந்த வார ப்ரோமோ

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் கோபியின் தந்தை ராமமூர்த்தி, கோபியிடம் சென்று கெஞ்சுகிறார். ஆனால் கோபி தனது தந்தையே அலட்சியப்படுத்திவிட்டு செல்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததாக கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது பத்திரிக்கை அடிப்பது, துணிமணிகள் எடுப்பது, திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வது என கோபி – ராதிகா திருமணத்திற்கு ஜரூராக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோபி தனது தாய் ஈஸ்வரியை கோவிலில் வைத்து சந்திக்கிறார். அப்போது தானும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை தனது தாயாரிடம் தெரிவிக்கிறார். அதற்கு ஈஸ்வரி மறுப்பு தெரிவிக்கிறார். என்னை மீறி எப்படி திருமணம் செய்து கொள்வாய் என்று நானும் பார்க்கிறேன் என்று சபதம் எடுத்து விட்டு செல்கிறார்.

காலில் விழுந்து கதறி அழும் ராமமூர்த்தி.! தந்தையை அசிங்கப்படுத்திய கோபி.! இந்த வார ப்ரோமோ 1

விளம்பரம்

மேலும் நீ செய்யும் செயல்களுக்கு எல்லாம் உன்னுடன் தலையை ஆட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று கோபியை கடுமையாக எச்சரிக்கை செய்கிறார் ஈஸ்வரி. இதை தனது வீட்டுக்காரர் ராமமூர்த்தியிடமும் தெரிவிக்கிறார். ஆனால் ராமமூர்த்தி இந்த திருமணத்தை நடத்த விடக்கூடாது என்று சபதம் எடுத்துவிட்டு கோபியை சந்திப்பதற்காக கோவிலுக்கு செல்கிறார். அங்கு கோபியை சந்தித்து இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறும், இனியாவை நினைத்துப் பார் என்றும் கோபியிடம் கெஞ்சுகிறார். ஆனால் கோபியோ நான் பாக்யாவை மறந்து விட்டேன், ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று திமிராக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதனால் அதிர்ச்சியான ராமமூர்த்தி அப்படியே அங்கே ஏன் நின்று விடுகிறார்.

தொடர்புடையவை  வில்லியாக மாறும் ராதிகா? கோபியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் ராதிகாவின் அம்மா.. நல்லா பண்றீங்கமா

காலில் விழுந்து கதறி அழும் ராமமூர்த்தி.! தந்தையை அசிங்கப்படுத்திய கோபி.! இந்த வார ப்ரோமோ 3

விளம்பரம்

ஆனால் கோபியின் திருமணம் என்று தெரியாமலேயே பாக்யா அந்த திருமண ஹாலுக்கு சமையல் ஆர்டர் எடுத்து வைத்திருக்கிறார். கோபி மகள் இனியாவிற்கு துணிமணிகள் எல்லாம் எடுத்துக் கொடுத்து இனியாவை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கோபியின் திருமணம் நடைபெறுமா? ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் என்ன செய்யப் போகிறார்கள்? திருமண வீட்டில் பாக்யா சமைப்பாரா? இனியா தனது அப்பா பக்கம் செல்வாரா என்பதெல்லாம் வரும் வாரங்களில் தெரியவரும். தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment