கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான “திருமணம்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள்தான் சித்து – ஸ்ரேயா. ஸ்ரேயா அஞ்சான் மங்களூருவை சேர்ந்தவர். நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்த இவருக்கு சித்துவுடன் திருமணம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நாடகத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சிகள் இவர்களது ரசிகர்களுக்கு நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் செய்து கொண்டால் என்ன? என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. ரசிகர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது சித்துவும் ஸ்ரேயாவும் படு பிஸியாக நாடகங்களில் நடித்து வருகின்றனர். சித்து, ராஜா ராணி சீசன் 2 வில் விஜய் டிவியில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை வைத்துள்ளனர்.அதில் பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். ஏதாவது ஒரு புது படம் வெளியானால் அந்த படத்தில் வருவது போலவே கெட்டப் போட்டு அந்தப் படத்தின் வைரல் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவர். இது பல மில்லியன் பார்வையாளர்களை அள்ளும். அதேபோல தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
மங்களூருக்கு மனைவி ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்று இருந்தார் சித்து. மங்களூரில் இருந்து கோவா 2 மணி நேரம்தான் என்று பொய் சொல்லி, அவரை ஏழு மணி நேரம் கார் ஓட்ட வைத்து கோவாவிற்கு அழைத்து சென்றுள்ளனர் ஸ்ரேயாவும், அவரதி தங்கையும். அங்கிருந்து அவர் சில வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு வீடியோவில் அவர் ஜான் சீனா போல மனைவி ஸ்ரேயாவை கழுத்தைப் பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளுகிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya