பிக்பாஸில் கலந்து கொண்டு, தற்போது சின்னத்திரையை கலக்கி வரும் ஒரு நட்சத்திர காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்து விடுகிறது. குறிப்பாக காதல் காட்சிகள் மக்களை பெரிதும் கவர்கிறது. அதில் தற்போது நடந்து முடிந்த சீசன் 5ல் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர் தான் அமீர் மற்றும் பாவனி. சின்னத்திரை நடிகையாக விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸுக்கு வந்தார். இங்கு இவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பாவனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அமீரும் பாவனியும் தற்போது ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பிக்பாஸில் இருந்த போதே அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனாலும் பாவனி எதுவும் சொல்லாமலே இருந்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாவனி தனது காதலை வெளிப்படையாக அமீரிடம் வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து கடுமையாக பிராக்டிஸ் செய்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியும் டைட்டிலையும் வென்றனர். நடனம் என்றால் என்ன என்று தெரியாத தனக்கு குருவாக இருந்து வழிகாட்டிய அமீருக்கு, தனது காதலை அப்போதுதான் முதன்முறையாக சொன்னார் பாவனி. அன்று தொடங்கி இன்று வரை இந்த ஜோடிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். மேலும் “செந்தாமரையே” என்னும் ஆல்பம் சாங்கிலும் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதில் அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சிக்காக கடுமையாக ப்ராக்டிஸ் செய்து வந்தனர். தற்போதும் அதுபோல பிராக்டிஸ் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் அமீரின் கழுத்தில் பாவனி ஏறி கடுமையாக ப்ராக்டிஸ் செய்கிறார். அந்த வீடியோவை நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the video below…
Youtube Video Code Embed Credits: SCB DANCE COMPANY