வெந்து தணிந்தது காடு படத்தில் நம் அனைவரின் மனம் கவர்ந்த மல்லிப்பூ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்பு தனது 47வது படமாக கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழின் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவர் தனது தந்தை டி.ஆரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சிறிது காலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவருக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கால சுழற்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இதன் பெரிய வெற்றிக்குப் பின்னர் சிம்பு பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு இணைந்து நடித்திருந்த படம் தான் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற வெற்றி படங்களையடுத்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்திருந்தனர். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்று இருந்தத. திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றையும், சிம்புவுக்கு டொயோட்டா உயர் ரக கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக மறக்குமா நெஞ்சமும், மல்லிப்பூ பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் மல்லிகைப்பூ பாடலை பலரும் ஸ்டேட்டஸாக வைத்து ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து மல்லிப்பூ என்ற பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடலை நீங்களும் காண