விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதில் பங்கேற்ற பலரும் பிண்ணனி பாடகர்களாக வலம் வருகின்றனர். சிலருக்கு டி.இமான் தன் படங்களில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா, தனது குழுவில் பாடுவதற்கு பலருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இது சீனியர், ஜீனியர் என்று எட்டு சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மறைந்த எஸ்பிபி, சின்னக்குயில் சித்ரா, எஸ்பிபி யின் மகன் சரண், சங்கர் மகாதேவன், கல்பனா போன்ற பலர் வெகு வருடங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான் இவர்கள் இருவரும் மிக காமெடியாக இந்த நிகழ்ச்சியை நடத்தி செல்வதால் இது இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்று சொல்லலாம். சூப்பர் சிங்கர் 8ன் ஜூனியர் இறுதி போட்டி சமீபத்தில் தான் முடிந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல மணங்களை வென்றவர் தான் மானசி. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் 8-ல் போட்டியாளராக களம் இறங்கினார். தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மேலும் பாடுவது மட்டுமில்லாமல் நடனத்திலும் அவர் சிறப்பான பயிற்சி பெற்றவராக இருந்தார். இவ்வாறாக தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மானசிக்கு படங்களில் பாடும் வாய்ப்பு கூட கிடைத்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு படத்தில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் பாடகியாக களமிறங்கி இருக்கிறார் மானசி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மானசி அவ்வப்போது புகைப்படங்களையும், தான் பாடும் ஆல்பம் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மானசி நவராத்திரியை முன்னிட்டு தன் வீட்டில் பூஜை நடத்தியுள்ளார். அப்போது அங்கு அமர்ந்து பாடல் ஒன்டாரி பாடி இருக்கிறார். அந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..