எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.! நா தழுதழுக்க பேசிய சீயான் விக்ரம்

பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு நான் எப்படி நன்றி சொல்ல போகிறேன் என்று நா தழுதழுக்க விக்ரம் பேசியுள்ள காணொலி தற்போது வைரலாகி வருகிறது. விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது சேதுதான். இந்த படத்தில் இவர் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய பட்டப்பெயரும் ஆகிப் போனது. அவரை அவரது ரசிகர்கள் செல்லமாக சீயான் என்றே அழைக்க தொடங்கினர். சியான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோப்ரா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 60 வயதை கடந்த போதிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விக்ரம்.

எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.! நா தழுதழுக்க பேசிய சீயான் விக்ரம் 1

விளம்பரம்

தமிழில் ஹாலிவுட் படங்களின் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக நடிப்பவர்கள் இரண்டு பேர். ஒன்று கமலஹாசன், இன்னொருவர் விக்ரம். இருவருமே நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அதேபோல் படத்திற்காக உடல் எடையை வெகுவாக இளைப்பதும், உடல் எடையை வேகமாக ஏற்றுவதும் இவர்கள் இருவருக்கும் கைவந்த கலை. அந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு படங்களில் நடித்து வருபவர்கள். தற்போது கூட பொன்னியின் செல்வன் படத்துக்காக விக்ரம் 10 மணி நேரம் குதிரையில் அமர்ந்து இருந்தார். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாகவும் பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார் விக்ரம்.

தொடர்புடையவை  20 வருஷத்துக்கு முன்னாடியே மக்களே காறித் துப்புன படம் இது.! மூட நம்பிக்கையை வளக்குற முட்டாள்தனமான படம் இது

எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.! நா தழுதழுக்க பேசிய சீயான் விக்ரம் 3

விளம்பரம்

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். இவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர்களில் விசில் பறந்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. முதல் நாள் என்பது கோடியையும் இரண்டாவது நாள் வரை 150 கோடியையும் வசூலை குவித்திருக்கிறது. இதனால் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இவ்வளவு அன்பை காட்டும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆதரித்த அனைவருக்கும் நன்ற என்று நா தழுதழுக்க பேசினார் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment