தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் ரட்சன்: தி கோஸ்ட். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் ரட்சன் தி கோஸ்ட். இந்த படத்தை பிரவீன் சட்டரோ என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா, மணி சவுத்ரி, ரவிவர்மா ஸ்ரீகாந்த் அய்யனார் என பலர் நடித்திருக்கின்றனர்.

பரத் மற்றும் சௌராப் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர். முகேஷ் என்பவர் படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவர உள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. 63 வயதிலும் நாகார்ஜுனா ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கிறார். அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Sony Music South