அரண்மனை போன்ற வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கிய லெஜெண்ட் அண்ணாச்சி.!

தன் மக்களுக்காக லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி செய்திருக்கும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. திரையுலகில் தற்போது தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்திற்காக தமன்னா, ஹன்சிகாவுடன் இணைந்து நடனம் ஆடினார். அப்போது இவர் பலராலும் உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத லெஜெண்ட் சரவணன் திரைப்படத்தில் நடிக்க ஆயத்தமானார். படத்தை யாரும் தயாரிக்க முன் வராததால், சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தானே உருவாக்கி அதன் மூலமாக தி லெஜன்ட் என்கிற படத்தில் நடித்தார்.

அரண்மனை போன்ற வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கிய லெஜெண்ட் அண்ணாச்சி.! 1 அரண்மனை போன்ற வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கிய லெஜெண்ட் அண்ணாச்சி.! 3 அரண்மனை போன்ற வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கிய லெஜெண்ட் அண்ணாச்சி.! 5

விளம்பரம்

அரண்மனை போன்ற வீட்டில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கிய லெஜெண்ட் அண்ணாச்சி.! 7

இந்த படத்தை விளம்பரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெரி என்ற இரு இயக்குனர்களை வைத்து எடுத்தார். தி லெஜன்ட் படம் வெளியான போது போட்டிக்கு எந்த படமும் வெளியாகாததால் படம் மிக நன்றாக ஓடியது. இரண்டு வாரங்களுக்கு போட்டியே இல்லாமல் வசூலையும் குவித்து இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு அண்ணாச்சி வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமானதாக தெரியவில்லை. விரைவில் அவர் இன்னொரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக கதை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சரவணன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மாளிகை போன்ற வீடு ஒன்றை கட்டியிருந்தது இணையத்தில் வெளியாகியிருந்தது. அந்த வீட்டை மக்களின் பார்வைக்காக ஒரு நாள் திறந்து வைத்திருந்தார் அண்ணாச்சி.

விளம்பரம்

விளம்பரம்

இந்த நிலையில் இன்று அண்ணாச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை நேசிக்கும் மக்களுக்காக 24 மணி நேரமும் அந்த வீட்டில் அன்னதானம் நடைபெறுவதாக அவர் கூறியிருக்கிறார். என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக எப்பொழுதும் என் வீடு திறந்து இருக்கும், 24/7 அன்னதானம் நடைபெறுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். அண்ணாச்சியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடையவை  கடைசி 30 நிமிஷம் பயங்கரமா அழுதேன்.! டான் படத்தை பற்றி சிவாவிடம் போனில் பேசிய சூப்பர்ஸ்டார்

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Karumpuli Views

விளம்பரம்

Leave a Comment