ராஜராஜ சோழன் காலத்துல இந்து-ங்கிற சொல்லே கிடையாது.! வெளுத்து வாங்கிய கமல்

கடந்த சில நாட்களாகவே ராஜராஜ சோழன் இந்து இல்லை என்கிற பிரச்சனை எழுந்து வருகிறது. இதற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்தை பலரும் எதிர்த்தும் வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து இல்லை, அவரை இந்து அரசராக காட்டும் முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, சைவ மன்னர்களை இந்து மன்னர்களாக காட்ட முயற்சிப்பது போன்று, நமது அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாக பேசியிருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு இயக்குனர் பேரரசு, நடிகை குஷ்பூ, சரத்குமார் போற்றவர்கள் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள். ஆனால் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாக சீமான், கருணாஸ் போன்றவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் கமலஹாசனும் அந்த கருத்தையே வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

ராஜராஜ சோழன் காலத்துல இந்து-ங்கிற சொல்லே கிடையாது.! வெளுத்து வாங்கிய கமல் 1

விளம்பரம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக நேற்று சென்னை பீனிக்ஸ் மாலுக்கு வந்திருந்தார் கமலஹாசன். இவர் விக்ரம், கார்த்தி உடன் இந்த படத்தை கண்டு களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் தமிழ் சினிமாவின் ரசிகனாக, தயாரிப்பாளராக, இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக இருக்கிறேன், பல நடிகர்கள் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இந்த நடிகர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக எனக்கு இந்த படத்தை பார்க்கும்போது மலைப்பு ஏற்பட்டது, கண்டிப்பாக இது அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்று தன் நம்புவதாக கூறினார். இந்த படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனத்தை என் குரலில் வரும், அதை மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக தமக்கு உணர்வு ஏற்படுகிறது என்று பேசியிருந்தார்.

தொடர்புடையவை  கிறிஸ்துவராக இருந்த போதும் மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த சாண்டி! வைரலாகும் புகைப்படம்

ராஜராஜ சோழன் காலத்துல இந்து-ங்கிற சொல்லே கிடையாது.! வெளுத்து வாங்கிய கமல் 3

விளம்பரம்

மேலும் வெற்றிமாறனின் கருத்து குறித்து கேட்ட செய்தியாளர்களுக்கு பதில் அளித்த கமலஹாசன், இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்திலேயே இல்லை. சைவம், வைணவம், சமணம் என்கிற மதங்கள் தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர். வெவ்வேறு மதங்கள் இருந்தது அதை எல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் தான் ஒருங்கிணைத்தார். இதெல்லாம் சரித்திரம், இதெல்லாம் பற்றி தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. இது பொன்னியின் செல்வன் என்கிற சரித்திர புனைவைப்பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம் என்று பேசினார். அவர் பேசிய வீடியோவில் முழு காணொளியை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment