விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் என்ற தொடரில் நடித்து வரும் ரவீனா தற்போது காமெடியான வீடியோ ஒன்றை தனது youtube பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இது இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. இவருக்கு வயது 20 தான். ஆனால் சிறு குழந்தையாக இருக்கும்போதே படங்களில் நடித்திருந்தார். ஜில்லா படத்தில் நடித்திருந்த இவர் பின்னர் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தியிருப்பார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று இருந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்றால் அது மௌன ராகம் தான். இந்த நாடகத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரவீனா.

ரவீனா எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். நடிப்பது, நடனம் ஆடுவது, யூடியூபில் வீடியோக்களை போடுவது என்று எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிக பிசியாக இருப்பார் ரவீனா. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடனமாடி அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர. தனது youtube சேனலில் இன்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் பாம்புகளை வைத்து அவர் மௌனராகம் செட்டில் பிராங்க் ஒன்றை செய்து இருக்கிறார். மேலும் கையில் தொட்டால் ஷாக் அடிக்கும் சாக்லேட்டை வைத்து அவர் பிராங்க் செய்திருக்கிறார்.

இந்த வீடியோவில் மௌனராகம் செட்டில் உள்ள அனைவரையும் அவர் பிராங்க் செய்திருக்கிறார். அவருடன் ஸ்ருதி, மனோகர், தருண், வருண் என அனைவரும் உள்ளனர். மிக காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Raveena Daha