பரத், வாணி போஜன் நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் “மிரள்” டீசர் வெளியானது.!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள படம் தான் மிரள். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராட்சசன் மற்றும் ஓ மை கடவுளே படத்தை தயாரித்த டில்லிபாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் டில்லி பாபு ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

பரத், வாணி போஜன் நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் "மிரள்" டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கியுள்ளார். கதையின் பின்புலமும், கதை நகரும் விதமும் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாடி இருக்கும் ஆலைகளை சுற்றியே படம் இருக்கும், பல இடங்களில் அழுத்தமான கதை அமைப்பும், மர்மமும் கலந்து இருப்பதால் படம் மிக அருமையாக வந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

பரத், வாணி போஜன் நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் "மிரள்" டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

மேலும் இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. சைக்கோ கொலையாளிகளிடம் மாட்டி தவிக்கும் பரத் வாணி போஜனை சுற்றி கதை நகர்கிறது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசரை நீங்களும் காண..Watch the video below…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment