ராஜ ராஜன் இந்து இல்லையா? வெற்றிமாறனை கலாய்த்து வீடியோ வெளியிட்ட சன் டிவி நடிகர்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் குறித்த தேடல் இணையத்தில் அதிகமாகி இருக்கிறது. பலரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தும், ராஜராஜசோழன் பற்றியும், சோழ மன்னர்கள் பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் தொடங்கிய பெரியவர்கள் வரை பொன்னியின் செல்வன் படம் அனைவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் ராஜராஜ சோழன் பற்றிய வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியிருந்தது. கட்சி மேடை ஒன்றில் பேசிய வெற்றிமாறன், தொடர்ந்து நம் அடையாளங்களை நம்மிடம் இருந்து பறிக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வள்ளுவருக்கு காவி உடை அனுபவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசராக காட்ட முயற்சி நடக்கிறது என்று பேசினார்.

ராஜ ராஜன் இந்து இல்லையா? வெற்றிமாறனை கலாய்த்து வீடியோ வெளியிட்ட சன் டிவி நடிகர் 1

விளம்பரம்

பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு வெற்றிமாறன் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்றும், ராஜராஜசோழன் இந்து இல்லை என்றால் அவர் முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றும் பல தரப்பினர் வெற்றிமாறனுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இயக்குனர் பேரரசு, நடிகை குஷ்பூ, சரத்குமார் போன்றவர்கள் வெற்றிமாறன் கருத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் வெற்றிமாறன் சொன்ன கருத்து சரிதான் ராஜராஜ சோழன் காலத்தில் சைவம், வைணவம் என்று தான் இருந்தது. இந்து என்ற ஒரு சொல்லே வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் நமக்கு கொடுத்தது என்று கமலஹாசன், சீமான், நடிகர் கருணாஸ் போன்றவர்கள் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வெற்றிமாறன் கருத்து குறித்து கேலி செய்யும் விதமாக நடிகர் ராகவ் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  குண்டா இருந்தப்பவும் கலாய்ச்சாங்க..இப்போ ஒல்லியான அப்புறமும் கலாய்குறாங்க !!முதல் முறை பேட்டி அளித்துள்ள குஷ்பூவின் மகள் அனந்திதா சுந்தர்!!

ராஜ ராஜன் இந்து இல்லையா? வெற்றிமாறனை கலாய்த்து வீடியோ வெளியிட்ட சன் டிவி நடிகர் 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கும் ராகவ், ராஜராஜ சோழன் ஒரு இந்து கிடையாது ஏனென்றால் அவர் பிறந்த காலத்தில் இந்து என்கிற ஒரு மதமே இல்லை என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், பாரதி, மகாத்மா காந்தி அனைவரும் இந்தியர்களே இல்லை. அவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் பிறந்தவர்கள் அவர்கள் பிறந்த போது இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது, 1947 க்கு பிறகு தான் இந்தியா என்ற நாடு உருவானது எனக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். வெற்றிமாறனின் கருத்துக்கு எதிராக சின்னத்திரை நடிகர் இந்த கருத்தை கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இவரெல்லாம் கருத்து சொல்லும் அளவிற்கு வெற்றிமாறன் நிலைமை வந்து விட்டது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

1 thought on “ராஜ ராஜன் இந்து இல்லையா? வெற்றிமாறனை கலாய்த்து வீடியோ வெளியிட்ட சன் டிவி நடிகர்”

  1. Adhu enna ivarellam. Yen ivaru karuthu sollakoodatha. karuthu suthandhiram anaivarukum uladhu. Ungal oodagam tharamatru poivitadhu

    Reply

Leave a Comment