நான் பிக்பாஸுக்குப் போறேன்.. பிக்பாஸ் செல்லும் முன் முதல் வீடியோவை வெளியிட்ட இலங்கை மாடல்..

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6 தற்போது பிரம்மாண்டமாக துவங்கி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6ல் தாம் கலந்து கொள்ள போவதாக இலங்கையைச் சேர்ந்த மாடல் ஜனனி என்பவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரியாலிட்டி ஷோக்களில்முதன்மை இடம் வகிப்பது பிக் பாஸ். 100 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் முன்பின் அறிமுகம் இல்லாத 16 நபர்களை உள்ளே கொண்டு வந்து எந்தவித பொழுதுபோக்கு இல்லாமல் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருப்பர். சண்டை, சச்சரவு, காதல், நட்பு என பல கண்டன்ட்கள் தரும் இடமாக பிக்பாஸ் இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் சீசன் சிக்ஸ் மாலை ஆறு மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

நான் பிக்பாஸுக்குப் போறேன்.. பிக்பாஸ் செல்லும் முன் முதல் வீடியோவை வெளியிட்ட இலங்கை மாடல்.. 1

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஜி.பி முத்து, விஜே மகேஸ்வரி, நடிகை ரட்சிதா மகாலட்சுமி, விஜே கதிரவன், நடிகர் அசீம், கிரிக்கெட் வீர்ர் ராம் ராமசாமி, சூப்பர் மாடல் ஷெரினா, இலங்கை மாடல் ஜனனி, வனிதாவின் முன்னாள் காதலர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், மெட்டி ஒலி சாந்தி, மணிகண்டன் ராஜேஷ் போன்ற 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எந்த பிக் பாஸிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 க்கும் அதிகமான போட்டியாளர்களை உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். அனைத்து பிக்பாஸிலும் 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடைசியாக வெளியான பிக் பாஸ் மட்டும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த முறை 21 போட்டியாளர்கள் வரை கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது.

தொடர்புடையவை  விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ்.! முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.! சீக்கிரம் கிளைமாக்ஸ்.!

நான் பிக்பாஸுக்குப் போறேன்.. பிக்பாஸ் செல்லும் முன் முதல் வீடியோவை வெளியிட்ட இலங்கை மாடல்.. 3

விளம்பரம்

இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவதை பிக்பாஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. சீசன் 3 வில் லாஸ்டலியா மற்றும் தர்ஷன் இருவரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு தற்போது ஜனனி என்ற மாடலை உள்ளே இறக்கி உள்ளனர். அவர் ஒரு வீடியோ வெளியிட்டு தான் பிக்பாஸ் செல்வதை உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment