உங்க பிரச்சனைய அடுத்தவங்கள்ட்ட சொன்னிங்கன்னா கும்மி அடிச்சிடுவாங்க என்று விஜய் ஆன்டனி போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆன்டனி குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடிப்பின் மீது வந்த ஆர்வத்தால் நடிக்க வந்தவர் விஜய் ஆன்டனி. இவர் நடித்த நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. தற்போது விஜய் ஆன்டனி அக்னி சிறகுகள், வள்ளி மயில், ரத்தம், பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

இதில் சில படங்கள் பணிகள் முடிந்திருந்த போதிலும் ஏதோ ஒரு காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது. சில படங்கள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சி. எஸ் அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் விஜய் ஆண்டனியின் படத்தை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. ட்விட்டரில் மிக ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி அடிக்கடி ஏதாவது ஒரு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி இருக்கிறது.

அதில் அவர், உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிஞ்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க.அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க, கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா என்ற கேள்வியை அவரிடம் எழுப்பி வருகின்றனர்.