இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் இருக்கும் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். போடா போடி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தாய்லாந்து ஸ்பெயின் என ஹனிமூன் சென்று வந்த அவர்கள் கடந்த வாரம் ஒன்பதாம் தேதி ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதாவது தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர்.

இந்தப் பதிவை பார்த்த பலரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள். திருமணமாகி நான்கு மாதங்களில் எப்படி இரட்டை குழந்தை பிறக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த குரந்தைகள் வாடகை தாய் முறையில் தான் பிறந்தது என்று நயன்தாரா மீது பலரும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் நயன்தாரா கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், கடந்த டிசம்பரில் வாடகை தாய்க்கு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் அதனால் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர். சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க தொடர்ந்து மகன்கள் பற்றிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.

அதன்படி தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் தனது கனவு நினைவாகியது என்று அவர் பதிவிட்டிருக்கிறார். அதில் மகன் தன் மீது சிறுநீர் கழித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் தான் காத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். தன் மகன் தங்கள் மீது சிறுநீர் கழிப்பது எல்லா அப்பாவிற்கும் ஒரு கனவு தானே.
