ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் அடுத்த தரமான படம்.! “குமாரி” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.!

தமிழ் திரையுலகில் தற்போது கவனம் பெற்று வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி “குமாரி” என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்து பலரின் உள்ளங்களை வென்றிருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இந்த படத்திற்கு முன்பாக விஷாலின் ஆக்ஷன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். தனுஷூடன் இணைந்து ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்திருந்தார. மலையாள படங்களின் மூலமாகத்தான் அறிமுகமான ஐஸ்வர்யாவுக்கு பூங்குழலி கதாபாத்திரத்திற்கு பின்னர் ரசிகர் பட்டாளம் பெருகி இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து பலரின் உள்ளங்களை கவர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் அடுத்த தரமான படம்.! "குமாரி" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.! 1

விளம்பரம்

சமீபத்தில் இவர் அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஹார்டின் சிம்பலுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இவரும் அர்ஜுன் தாசும் ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை, நானும் அர்ஜுனும் நல்ல நண்பர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது பொன்னியின் செல்வன் படக் குழுவினருடன் இந்திய முழுமைக்கும் டூருக்கு சென்றிருக்கிறார். அடுத்ததாக கிங் ஆஃப் கோதா என்கிற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து தமிழில் குமாரி என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தியா மூவி சார்பில் பி பிரதீப் தயாரிக்கிறார். நிர்மல் சகாதேவ் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

தொடர்புடையவை  'தர்பார்' படத்தின் அப்டேட்! ஆதித்யா அருணாச்சலமாக ரஜினி!!

ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் அடுத்த தரமான படம்.! "குமாரி" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.! 3

விளம்பரம்

மேலும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை பார்க்கும் பொழுது இந்த படம் ஹாரர் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே மலையாளத்தில் உருவாகியிருந்த இந்த படம் தற்போது தமிழில் வெளியாக இருக்கிறது. அந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பித்திருக்கிறது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits:Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment