57 வயதில், 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு.!

25 வயதில் ஆட்டிசம் குறைபாடு இருக்கும் மகனை வைத்துக்கொண்டு 23 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் பப்லு. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி, பின்னர் பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ். மர்ம தேசம் தொடரில் நடித்தது இவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. பின்னர் ராதிகாவின் தொடரான அரசியில் திருநங்கையாக நடித்தார். பின்னர் ராஜராஜேஸ்வரி, வாணி ராணி போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்ததால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 வில் பங்கெடுத்தார். அப்போது இவருக்கும் நடிகர் சிம்புவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பப்லு.

57 வயதில், 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு.! 1

விளம்பரம்

இவர் 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அஹித் என்கிற மகனும் இருக்கிறார். அஹித் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர். சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் 57 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தன்னுடைய மனைவி தான் என்று கூறி 23 வயது பெண் ஒருவரை மேடையில் ஏற்றினார். இதை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. பப்லுவுக்கும் பீனாவுக்கும் திருமணம் ஆகி 25 வயதில் மகன் ஒருவர் இருக்கும் நிலையில், அவரின் இந்த இரண்டாவது திருமணம் குறித்து சலசலப்பு ஏற்பட்டது. மகனின் ஆட்டிசம் குறைபாடு காரணமாக பப்லுவுக்கும் பீனாவுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட தொடங்கியிருக்கிறது. இதனால் அவர்கள் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடையவை  College தானே போறா? உன்ன மாதிரி திருட்டு தனமா பண்றா? கோபி முகத்தில் அடித்தார் போல பேசிய ஈஸ்வரி.!

57 வயதில், 23 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு.! 3

விளம்பரம்

அப்போதுதான் பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் பழக்கமாகி இருக்கிறார். அவர் மலேசியாவில் பப்லு தொழில் தொடங்குவதற்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார். மலேசியாவில் பப்லு சில தொழில்களை செய்து கொண்டிருக்கிறார். அதற்கு அடித்தளமாக இருந்தது இந்த பெண் தான் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டதாக பப்லுவிற்கு நெருக்கமானவர்கள் பலர் கூறி வந்தனர். முதல் மனைவி பிரிந்துவிட்ட போதிலும் தன்னுடைய மகனுக்கு தேவையான விஷயங்களை பப்லுதான் இன்றும் செய்து வருகிறார். இந்த நிலையில் பப்லுவின் இந்த இரண்டாவது திருமணம் சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment