ஜிவி பிரகாஷ், கெளதம் வாசுதேவ் கூட்டணியில் திரில்லர் படம்.! 13 படத்தின் டீசர் வெளியானது.!

ஜிவி பிரகாஷ் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 13 படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள், மதராசபட்டினம், சூரரைப் போற்று, அசுரன் போன்ற படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் 13. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜிவி பிரகாஷ், கெளதம் வாசுதேவ் கூட்டணியில் திரில்லர் படம்.! 13 படத்தின் டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

செல்ஃபி என்கிற திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து நடித்த ஜிவி பிரகாஷ், அதைத் தொடர்ந்து அவர் தற்போது 13 படத்திலும் இணைந்திருக்கிறார். ஹாரர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த படம்,்விவேக் என்கிற புதுமுக இயக்குனரால் இயக்கப்பட்டது. நந்தகோபால் என்பவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.்இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கூட்டணியில் வெளியான செல்ஃபி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் தற்போது புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர்.

தொடர்புடையவை  மேம் ஹனி மூன்-க்கு எங்க போறீங்க? கேள்வி கேட்டவுடன் வெட்கப்பட்டு சிரித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா

ஜிவி பிரகாஷ், கெளதம் வாசுதேவ் கூட்டணியில் திரில்லர் படம்.! 13 படத்தின் டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது இந்த டீசர். நீங்களும் அந்த டீசர் வீடியோவை காண.. ! Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment