அவருக்கு உண்மையில் இதுதான் நடந்தது.! கணவர் இறந்த பின்பு முதல் முறையாக பேட்டி அளித்த மீனா.!

கணவர் இறப்புக்கு பின்பு முதல் முறையாக நடிகை மீனா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தனது கணவர் இறப்பு தொடங்கி, தனது தோழிகளின் நட்பு வரை பல விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக 90களில் வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். என் ராசாவின் மனசினிலே என்ற படத்தில் மூலமாக ராஜ்கிரனுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றார் மீனா. இவருடைய கணவர் வித்யாசாகர். பெங்களூருவை சேர்ந்த இவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மீனா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அவருக்கு உண்மையில் இதுதான் நடந்தது.! கணவர் இறந்த பின்பு முதல் முறையாக பேட்டி அளித்த மீனா.! 1

விளம்பரம்

13 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். நுரையீரல் பாதிப்புடன் கொரோனா தொற்றும் ஏற்பட்ட காரணத்தினால், அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மீனா கடுமையான முயற்சிகளை செய்தார். ஆனால் வித்யாசாகரை காப்பாற்ற முடியவில்லை, ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது. இது திரையுலகினர் மட்டுமல்லாமல் மீனாவின் ரசிகர்களையும் கடுமையான சோகத்தில் ஆழ்த்தியது. தனது கணவரின் உடலுக்கு மீனாவே இறுதி சடங்குகளை செய்தார். ஒரு பெண் ஏன் இறுதி சடங்கு செய்கிறார் என்று அப்போது மீனாவை பலரும் கேள்வி எழுப்பினர்.

தொடர்புடையவை  ஆனந்தக்கண்ணீர் வடித்த சாய் பல்லவி!!

அவருக்கு உண்மையில் இதுதான் நடந்தது.! கணவர் இறந்த பின்பு முதல் முறையாக பேட்டி அளித்த மீனா.! 3

விளம்பரம்

தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கும் மீனா, தன் தந்தை இறந்தபோது மகனாக இருந்து வித்யா சாகர் தான் இறுதிச் சடங்குகளை செய்தார். அவருக்கு நான் இறுதிச் சடங்குகளை செய்வதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும் என் கணவர் இறந்து, தனியாக இருந்தபோது என் பிறந்தநாள் தொடங்கி என்னை வெளியில் அழைத்துச் செல்வது வரை அனைத்தையும் என் நண்பர்கள் பார்த்து பார்த்து செய்தனர். அந்த நேரத்தில் தான் என்னுடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை நான் தெரிந்து கொண்டேன். என் கணவருக்கு உண்மையிலேயே பெங்களூரில் வசிக்கும் போது புறா எச்சங்களினால் நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்தது. ஆனால் கொரோனாவிற்கு பிறகு அவர் உடல்நிலை தேறி வந்தார்.

அவருக்கு உண்மையில் இதுதான் நடந்தது.! கணவர் இறந்த பின்பு முதல் முறையாக பேட்டி அளித்த மீனா.! 5

விளம்பரம்

 

அப்புறம் என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் உடல்நிலை திடீரென மோசமானது. பிறகு மருத்துவமனையில் அனுமதித்தும் பலன் இல்லாமல் அவர் இறந்து போனார். உடல் உறுப்புகளை தானமாக பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றது. இரத்த வகை ஒத்துப் போக வேண்டும், ஒரு ஆளின் உயரம், எடை, ரத்த வகை ஆகிய அனைத்தும் ஒத்துப் போனால் தான் உறுப்புகள் கிடைக்கும். உறுப்புகள் கிடைக்கும் காரியம் எளிதானதில்லை. எனவே உறுப்பு தானம் செய்யுங்கள். ஏற்கனவே கமலஹாசன் உடல் தானம் செய்திருக்கிறார். தற்போது நான் செய்திருக்கிறேன் என்னை பார்த்து பலரும் உடல் தானம் செய்யுங்கள், நாம் இறந்த பின்பு நம் உடலின் உறுப்புகள் ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்று வருத்தத்துடன் மீனா பேசினார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Aval Vikatan

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment