நானும் ரவுடிதான் பட சூட்டிங்கில் நயன்தாராவிற்கு வசனம் சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோவை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஏழு ஆண்டுகள் தன்னுடைய அழகான அனுபவம் என்றும், அந்த படம் தமக்கு அனைத்தையும் கொடுத்ததாகவும் பதிவிட்டு இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் அதற்கு முன்பு மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தார். பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு மூன்று மலையாள படங்களில் நடித்த பின்னர், அவர் தமிழ் திரையுலகில் தலைகாட்டத் தொடங்கினார். அன்று தொடங்கி இன்று வரை 20 ஆண்டுகளில் அவர் 75 படங்களுக்கு மேல் நடித்த முடித்துள்ளார்.

தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் இது அவருக்கு முதல் படம் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் உடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியும் இருக்கிறார். இந்த விஷயம் சமீப காலமாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சட்டம் இந்தியாவில் இருக்கும்போது நான்கே மாதங்களில் எப்படி இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்ற சர்ச்சை எழுந்தது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்து விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ்வனும் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, நயன்தாராவிற்கு வசனம் சொல்லிக் கொடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அனைத்தையும் பெற்றேன் என்ற பதிவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..