மகனை நினைத்து கதறி அழுத ஜிபி முத்து.! கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.! உணர்வுபூர்வமான தருணம்

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதே பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 20 பேர் அளவிற்கு கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பி வருகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கின்றனர். குறிப்பாக திருநங்கை ஒருவருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகனை நினைத்து கதறி அழுத ஜிபி முத்து.! கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.! உணர்வுபூர்வமான தருணம் 1

விளம்பரம்

 

பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து சண்டை, பிரச்சனை என நீடித்து வருகிறது. முதல் நாளே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை பெற்று அந்த வாரத்திற்கான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை தனித்தனியாக விளையாட போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு அவர்கள் உணவு சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும் 4 பேரை நாமினேட் செய்து அவர்களை வெளியில் உள்ள பெட்டில் படுத்து உறங்க வேண்டும் என்றும் பிக்பாஸ் கூறுகிறார் இதனால் சண்டை ஏற்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து நிரந்தரமாக விலக போறீங்களா? இனிமே தொகுத்து வழங்க மாட்டிங்களா? நச் என்று பதில் அளித்த கமல்

மகனை நினைத்து கதறி அழுத ஜிபி முத்து.! கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.! உணர்வுபூர்வமான தருணம் 3

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜிபி முத்துவை கமலஹாசன் அழைத்து பேசுகிறார். உங்களுக்கு வெளியில் நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும் கூறுகிறார். அப்போது அரங்கில் கூடி இருக்கும் மக்கள் கை தட்டி உற்சாகம் செய்கின்றனர். மேலும் இதையெல்லாம் உங்கள் மகன் விஷ்ணுவும் பார்த்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல உடைந்து போய் அழுகிறார் ஜிபி முத்து.! அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment