அமீர் பாவனி இருவரும் இணைந்து இந்த வருடம் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த இவர் ஹிந்தி படத்தின் மூலமாக சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தார். சின்ன தம்பி சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகையாக அறிமுகம் ஆனார்.

பின்னர் வாய்ப்புகள் குறைந்த போது பிக்பாஸ்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அங்கு வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அமீருடன் காதல் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் சேர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இங்கு இருவரும் டைட்டிலை வென்று இருந்தனர்.

அதுவரை அமீருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த பாவனி இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமீரை காதலிப்பதாக அறிவித்தார்.

தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.

இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.