கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 6. எப்போதும் இல்லாத அளவிற்கு தொலைக்காட்சியில் ஒரு மணி நேரமும், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரம் லைவ்வாக பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் 16 முதல் 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அதிகபட்சமாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஜி.பி. முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி தானாக முன்வந்து வெளியேறி விட்டார். எனவே இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பலரும் எண்ணி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.

பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கின்றனர். குறிப்பாக திருநங்கை ஒருவருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து சண்டை, பிரச்சனை என நீடித்து வருகிறது. முதல் நாளே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. முன்பெல்லாம் குழுவாக விளையாடி லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை பெற்று அந்த வாரத்திற்கான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வர். ஆனால் இந்த முறை அப்படி இல்லை தனித்தனியாக விளையாட போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தனித்தனியாக பெரும் மதிப்பெண்களைக் கொண்டு அவர்கள் உணவு சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தனலட்சுமி தான் தள்ளவே இல்லை என்று கமலிடம் கூற குறும்படம் போடலாமா என்று கேட்கிறார். அதற்கு தனலட்சுமி குறும்படம் போடுங்க சார் என்று கேட்க, கமலும் குறும்படம் போட சொல்கிறார். வேற லெவெலில் இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Disney + hotstar tamil