தல தீபாவளி முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சித்து ஸ்ரேயா தம்பதிகள்.!

தல தீபாவளி முடிந்த கையோடு சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தல தீபாவளி முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சித்து ஸ்ரேயா தம்பதிகள்.! 1

விளம்பரம்

சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். பட்டாசுகள் வெடிக்கும் வீடியோக்கள், அவர்கள் தீபாவளிக்காக செய்த ஷாப்பிங் வீடியோக்கள் அனைத்தையும் youtube சேனலை வீடியோக்களாக பதிவிட்டு இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். சமீபத்தில் கூட தனது காதல் மனைவிக்கு மோரிஸ் கேரேஜ் ரக காரை பரிசளித்திருந்தார் சித்து.

தொடர்புடையவை  காவேரியை கழட்டி விட்டு ராகினியுடன் ஊர் சுற்றும் நிவின்.? பார்த்துவிட்ட கங்கா.! இனி நடக்கப்போவது என்ன?

தல தீபாவளி முடிந்த கையோடு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சித்து ஸ்ரேயா தம்பதிகள்.! 3

விளம்பரம்

தல தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாடி இருந்த இவர்கள் அது முடிந்த கையோடு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றையும் பகிர்ந்து இருந்தனர். அதில் இவர்கள் இருவருக்கும் சிறந்த நடிகர் நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஃவேப் ஸ்டார்ஸ் ஐகானிக் அவார்ட் 2022 சார்பில் இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் இருக்கும் புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். சிறந்த நடிகர் நடிகைக்கான விருது பெற்ற இவர்களுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்சும் குவிந்து வருகிறது. Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya

விளம்பரம்

Leave a Comment