பிக்பாஸ் சீசன் சிக்ஸ் போட்டியாளர்களில் ஒருவர், தன்னைப்பற்றி ப்ரோமோஷன் செய்வதற்காக லட்சக்கணக்கில் செய்துள்ளதாக அவரே பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை சண்டை, சச்சரவு, நட்பு, காதல் என பல கண்டென்ட் கொடுக்கும் இடமாக தொடங்கி இருக்கிறது. தொடங்கிய 20 நாட்களில் பல பிரச்சனைகள், சண்டைகள் என நடந்து முடிந்திருக்கிறது. 21 பேர் போட்டியாளர்களாக வந்த நிலையில் அதில் நடன இயக்குனர் சாந்தியும், ஜி பி முத்துவும் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் அசல் கோளாறு வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சீசன் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவை ஓடிய அளவிற்கு சீசன் 4 மற்றும் 5 அவ்வளவாக ஓடவில்லை. இதற்கு முக்கிய காரணம் இரண்டு இருக்கிறது ஒன்று கொரோனா பாதிப்பு, மற்றொன்று விஜய் டிவியின் பிரபலங்களை அதிகமாக பயன்படுத்தியது. கொரோனா காலம் என்பதால் விஜய் டிவியின் பிரபலங்களை அதிகமாக பயன்படுத்தி சீசன் 4 மற்றும் 5 எடுக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் மக்கள் மனங்களில் சென்று அடையவில்லை. இதனால் சீசன் 6ஐ வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்று சர்ச்சையான போட்டியாளர்கள் பலரை உள்ளே இறக்கி இருந்தது விஜய் டிவி. பிக்பாஸ் சீசன் 3 இன் வெற்றிக்கு காரணமாக கருதப்பட்டது முகங்கள் தெரியாத பலரையும் உள்ளே அனுப்பி இருந்ததுதான், அதுபோலவே சீசன் 6லும் நிறைய அறியப்படாத புது முகங்களை உள்ளே அனுப்பி இருந்தார்கள்.

அதில் குறிப்பிட்ட ஒரு நபராக இருப்பவர் ராம் ராமசுவாமி. இவர் கிரிக்கெட் வீரராக இருந்திருக்கிறார். தற்போது இவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் பிக்பாஸ் வருவதால் வெளியே தன்னை பிரமோஷன் செய்வதற்காக ராம் ராமசாமி 10 லட்ச ரூபாய் செலவு செய்தார் என்று ஒரு போட்டியாளர் கூற, ராம் ராமசாமியும் அவ்வளவு செய்யவில்லை குறைவாகத்தான் செய்திருக்கிறேன் என்று கூறுகிறார். பின்னர் 5 லட்சமா என்று மற்ற போட்டியாளர்கள் கேட்க இல்லை, இரண்டரை லட்சம் என்று ஒப்பு கொண்டு விட்டார் ராம் ராமசாமி. ஏற்கனவே பிக்பாஸ் வந்த நிறைய பேருக்கு ப்ரமோஷன் செய்த ஒருவரிடம் அந்தப் பணியை தான் கொடுத்திருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். எனவே பிக்பாஸ் வருவதற்கு முன்பே தன்னை பற்றி பிரமோஷன் செய்வதற்கு அவர் இரண்டரை லட்சம் செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது.
" nan inga panrathu veliyee promote pannanuma"
Aama . Ram .. nenga veetla ❤️ track thavira vera enna pandringa 🤣🤣#biggbosstamil6 pic.twitter.com/k6TPgoEa16
— குருநாதா👁️ (@gurunathaa4) October 29, 2022