சின்னத்திரையில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் இருவரும் அறிமுகமாகினர். ஆல்யா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் நடிகர் சஞ்சீவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மானஸ் உடன் காதல் முறிவு ஆனது. பின்னர் சஞ்சீவும், ஆல்யாவும் காதலிக்கத் தொடங்கினர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆல்யா இஸ்லாமியர் என்பதால் அவர்கள் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நாடகத்தில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி ஒத்துப் போகவே நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகள் ஆயினர். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு மகளும், அர்ஷ் என்ற குட்டி மகனும் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்கு தற்போது இரண்டாவதாக அர்ஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சஞ்சீவும் ஆர்யா மானசாவும் இணைந்து சஞ்சீவ் ஆல்யா என்ற ஒரு youtube சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் இவர்கள் செய்யும் சிறு சிறு வீடியோக்கள் மற்றும் Vlogsகளை பதிவேற்றி வருகின்றனர். அதை பார்ப்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. எப்பொழுதும் இவர்களின் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டும்.

இரண்டாவதாக குழந்தை பிறந்ததால் ஆல்யாவின் உடல் எடை வெகுவாக ஏறியது. ஆல்யாவுக்கு நாடங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த போதிலும் உடல் எடையால் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. எனவே உடல் எடையை உடனே குறைத்து விட்டு தனது கணவருடன் சன் டிவியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தீவிரமாக உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்து வருகிறார் ஆல்யா. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து உள்ளார். மீண்டும் பழைய ஆல்யாவாக மாறி செம்ம குத்தாட்டம் இருக்கிறார். எனவே விரைவில் அவரை சீரியலில் பார்க்கலாம் என தெரிகிறது.