நாங்கள் கணவன் மனைவி.! எப்படி தெரியுமா? விஷால் உடன் காதல் பற்றி உண்மைகளை உடைத்த அபிநயா.!

நடிகர் விஷால் மற்றும் நடிகை அபிநயா இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அபிநயா. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் 2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சண்டக்கோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. பின்னர் அரசியல் ஆசை வர ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் அரசியலுக்கு முழு நேரமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் கணவன் மனைவி.! எப்படி தெரியுமா? விஷால் உடன் காதல் பற்றி உண்மைகளை உடைத்த அபிநயா.! 1

விளம்பரம்

விஷால் தற்போது லத்தி என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இந்ந நிலையில் விஷால் பற்றி ஒரு தகவல் சில நாட்களாக தீயாக பரவி வந்தது. நாடோடிகள் படத்தில் நடித்த மாற்றுத்திறனாளியான அபிநயாவுக்கும் விஷாலுக்கும் இடையே காதலில் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. அபிநயா ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். அவரால் வாய் பேச முடியாது. இருப்பினும் பூஜை, குற்றம் 23, ஈசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  விவேக் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்!

நாங்கள் கணவன் மனைவி.! எப்படி தெரியுமா? விஷால் உடன் காதல் பற்றி உண்மைகளை உடைத்த அபிநயா.! 3

விளம்பரம்

 

தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான சீதாராமம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி என்கிற படத்தில் அபிநயா நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அபிநயா. படப்பிடிப்பில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிலர் இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து விட்டதாகவும் பரப்பி வந்தனர். இந்த நிலையில் அபிநயா விஷாலை காதலிப்பதாக பரவிய தகவலில் உண்மை இல்லை என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து இப்படி தவறான பதவியை பரப்பி உள்ளார்கள் என்றும் இந்த செய்தி தவறானது என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sathiyam News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment