துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக அஜித் வருவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அஜித் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். இதை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது twitter பக்கத்தில் அறிவித்திருக்கிறார். வெகு நாட்களுக்குப் பிறகு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வருகின்ற பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக இருக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்பி இருக்கின்றனர். பொதுவாகவே அஜித்தை பொருத்தவரை எந்தவிதமான ப்ரமோஷனுக்கும் வரமாட்டார். பாடல் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு என்று அவரது படத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார்.

இந்த நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன்க்காக அவர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் நல்ல படங்கள் தானாகவே ஓடும், நல்ல படங்கள் தானாகவே அதன் விளம்பரத்தை தேடிக் கொள்ளும் என்று அஜித் கூறியுள்ளதாக சுரேஷ் சந்திரா பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அஜித் வர மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எச் வினோத்தின் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறது இந்தக் கூட்டணி. அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அறிவித்திருந்தார். படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. மேலும் துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோத இருப்பதால் ப்ரொமோஷன் பணிகளை முடுக்கி விட படக் குழு திட்டமிட்டு இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை பிரமோஷனில் ஈடுபட வைக்க பட குழுவினர் ஆர்வம் காட்டி வந்தனர். இது பற்றி அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். ஆனால் அஜித்திடமிருந்து “நல்ல படங்கள் அதன் விளம்பரத்தை தானாக தேடிக் கொள்ளும்” என்கிற பதிலே வந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அசல் படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர் எந்த படத்தில் இருக்கும் விளம்பரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
