கமலின் 68வது பிறந்த நாள் கொண்டாட்டம்.! மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ள விஜய் டிவி.!

வருகின்ற ஏழாம் தேதி கமலஹாசனின் 68 ஆவது பிறந்தநாளை விஜய் டிவி பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை தற்போது வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி. இதில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகை குஷ்பூ, விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியும் இந்திய திரை உலகின் உலகநாயகனுமான கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். 1960 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக சுமார் 6 திரைப்படங்களில் நடித்த அவர், 1973 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் என்னும் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார். கே. பாலச்சந்தரை தனது மானசீக குருவாகவும் ஏற்றுக் கொண்டார்.

கமலின் 68வது பிறந்த நாள் கொண்டாட்டம்.! மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ள விஜய் டிவி.! 1

விளம்பரம்

 

அன்று தொடங்கி அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அபூர்வ ராகங்கள் திரைப்படமும், இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. பல தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, ஃபிலிம் ஃபேர் அவார்டுகள், கலைமாமணி விருதுகள், செவாலியே விருதுகள் என்று தனது நடிப்பிற்கு மணிமகுடங்களாக பல விருதுகளை பெற்றிருக்கிறார் கமல். ராமநாதபுரம் பரமக்குடியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த இவர், இன்று உலக நாயகனாக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இவருக்கு இருக்கும் கலை மீது இருக்கும் ஆர்வம் தான். நடிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, படங்கள் தயாரிப்பது என்று கலை உலகின் உச்சபட்சத்தில் இருக்கிறார் கமலஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 500 கோடி வசூலுக்கும் அதிகமாக குறித்து சாதனை படைத்திருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  மெகா சீரியலை ஸ்லோ மோஷன்ல பாத்தா மாதிரி இருக்கு 'டெவில்' படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.!

கமலின் 68வது பிறந்த நாள் கொண்டாட்டம்.! மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ள விஜய் டிவி.! 3

கமலஹாசன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கமலஹாசனுக்கு 68வது பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை கமல் ரசிகர்கள் பலரும் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். அதேபோல் விஜய் டிவியும் கமலின் பிறந்தநாளை கொண்டாட முடிவெடுத்துள்ளது. தற்போது அதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதில் குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், கே எஸ் ரவிக்குமார் ஆகிய பலர் வந்து கமலஹாசனை வாழ்த்துகின்றனர். கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறார் கமலஹாசன். அந்த அழகிய ப்ரோமோவை நீங்களும் காண.. ! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment