எதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க.! கண்கலங்கி மன்னிப்பு கேட்ட அசல்.!

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு அசல் கோளாறு முதல் முறையாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அசல் கோளாறு என்கிற பெயரில் கானா பாடல்களை பாடி வந்தார். இவர் பாடிய ஜோர்த்தாலே என்ற பாடல் மிகப் பிரபலமானது. இதன் பின்னர் அவர் பாடல்கள் எழுதுவது, பாட்டு பாடுவது, என்றே மிகவும் பிஸியாக இருந்து வந்தார். அவர் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசைக்கு கூட சில பாடல்களை எழுதி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கிய பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொடங்கிய நாள் முதலே அவர் மீது ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது.

எதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க.! கண்கலங்கி மன்னிப்பு கேட்ட அசல்.! 1

விளம்பரம்

குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொண்ட முறை முகம் சுளிக்க வைத்தது. இதனால் இரண்டாவது ஆளாக பிக்பாஸில் இருந்து அவரை வெளியேற்றி இருந்தனர். பெண்களை அத்துமீறி தொடுவது கட்டிப்பிடிப்பது, தடவுவது, பெண்கள் மீது காலை தூக்கி போடுவது என்று பார்ப்பவர்களுக்கு சற்று முகம் சுளிக்கும் வகையிலேயே அசல் கோளாறு நடந்து கொண்டார். இதை வீட்டில் உள்ள யாருமே கண்டிக்கவில்லை. சில இடங்களில் ராபர்ட் மாஸ்டர் மட்டும் அதை கண்டித்து இருந்தார். இதனால் மக்கள் பலரும் வெளியில் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என்று மீம்ஸ்களை போட்டு வந்தனர். கமலஹாசனை ட்விட்டரில் டேக் செய்து அவனை வெளியேற்றுங்கள் என்று மீம்ஸ்களை போடத் தொடங்கினர். அசல் வெளியே வரும்போது கூட கமலஹாசன் நீங்கள் எதற்காக வெளியேறினார்கள் என்பதை உங்கள் நண்பர்கள் உங்களுக்கு சொல்லுவார்கள் என்று அனுப்பி வைத்தார்.

தொடர்புடையவை  ரசிகர்கள் காட்டிய அன்பு..சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்ட சிபு..இனி உங்க அர்ஜூன் சாராக தொடர போறேன்..

எதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க.! கண்கலங்கி மன்னிப்பு கேட்ட அசல்.! 3

விளம்பரம்

வெளியே வந்த பின்பு முதல் முறையாக அசல் கோளாறு தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அப்போது அவர் கண் கலங்கி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் தவறான எண்ணத்தில் அவ்வாறு தொடவில்லை, அப்படி தொட்டிருந்தால் அங்கு இருக்கும் பெண்கள் என்னை தொடவே விட்டிருக்க மாட்டார்கள். என் வீட்டில் என் பெரியம்மா சித்தி வீட்டிற்கு எல்லாம் செல்லும்போது அங்கு உள்ளவர்களிடம் எப்படி பழகுவேனோ அதேபோல் தான் பழகினேன். சென்ற மூன்றாவது நாளே நான் கேமரா இருப்பதை மறந்து விட்டேன். அதனால் தான் என்னவோ என்னை மக்கள் வெளியேற்றி விட்டார்கள். மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். நான் தவறான எண்ணத்தில் அவ்வாறு செய்யவில்லை, அது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்கிறேன் என்று கண் கலங்கி பேசியிருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil News Live 24×7

விளம்பரம்

Leave a Comment