உருவக் கேலி செய்வது குறித்து கமல் கடந்த வார எபிசோடில் பலமுறை அறிவுறுத்தியும், இந்த வாரம் மீண்டும் அதே செயலை மகேஸ்வரியும் மைனாவும் செய்திருப்பது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விக்ரமனின் உடல் மொழியை மகேஸ்வரி கேலி செய்திருப்பது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மகேஸ்வரியையும் மைனாவையும் பூமர் ஆண்ட்டிகள் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிகமான சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் இடமளிக்கும் இடமாக இருக்கிறது. முதல் இரண்டு வாரமாக விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோருக்கிடையே நடந்த சண்டை பரபரப்பை கிளப்பியிருந்தது. சண்டை மட்டுமல்லாமல் உருவ கேலிகளும் செய்யப்பட்டது.


குறிப்பாக திருநங்கையாக பங்கேற்று இருந்த சிஷினை அசீமும் மணிகண்டனும் உருவக்கேலி செய்திருந்தனர். இதனால் கமலே டென்ஷன் ஆகி அசீமையும் மணியையும் கண்டித்தார். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் மகேஸ்வரிக்கும் விக்ரமனுக்கும் சண்டை நடந்தது. அப்போது விக்ரமனின் உடல்மொழியை உருவக்கேலி செய்வது போல் நடித்துக் காட்டினார் மகேஸ்வரி. இதை அப்போதே விக்ரமன் கண்டித்து இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மகேஸ்வரி மற்றும் ஏடிகே இருவரும் விக்கிரமனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். விக்ரமன் எது சொன்னாலும் அந்த சண்டையில் இவர்கள் இருவரும் வான்டட் ஆக வந்து ஆஜர் ஆகி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
#VJMaheswari பூமர் Body Shaming பண்ணலனா #Myna
பூமர் ஏன் நக்கலா சிரிக்கணும்????#Vikraman.#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/ZuiApn70Ab— Bhimjith (@Bhimjith1) November 2, 2022
#Maheswari cheap behaviour & Jealous on #Vikraman is getting more day by day. Maheswari is such an character who Jealous of person who get fame from audience. Maheswari overconfident that’s she deserve more that everyone. #BiggBossTamil6 #BiggBossTamil #biggboss6tamil pic.twitter.com/A4h8OXSeRN
— TV GO (@TV_GO_) November 2, 2022
#BiggBossTamil #BiggBossTamil6
Whole anbu gang is cornering and disrespecting #Vikraman
Mahe, Myna and Mani abnoxioua to the core 👎 pic.twitter.com/cNrlsj5S7q— Raju (@partlysanee) November 1, 2022
அசீமுக்கும் விக்ரமனுக்கும் சண்டை ஏற்படும் போது, அசீம் பக்கம் நின்று விக்ரமனை தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் மகேஸ்வரி மற்றும் ஏடிகே. ஆனால் கமல் வரும் எபிசோடில் இருவலும் அசீமுக்கு எதிராக பல்டி அடித்து விடுகின்றனர். இந்த நிலையில் நேற்று டிவி டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிரணியின் நடுவர்களாக விக்ரமனும் ரட்சிதாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது, மகேஸ்வரி மைனா இருவரும் குறுக்கே புகுந்து பேசத் தொடங்கினர். அப்போது விக்ரமன் மைனா நடத்திய நிகழ்ச்சி சரியில்லை என்று கூற அதற்கு மைனா கடுமையான கோபம் அடைந்தார். அப்போது நடுவில் வந்த மகேஸ்வரி திடீரென விக்ரமனை போலவே உடல் மொழி செய்து காண்பித்தார். இதை பார்த்து மைனாவும் கேலி செய்து சிரித்தார்.
Beware of people like Maheswari.
When Dhana and Azeem were inside the bedroom, she blamed Azeem and Dhana got hyper.
When Dhana was outside the bedroom, Maheshwari blames Dhana and supports Azeem.
In a matter of minutes.
#BiggBossTamil6 pic.twitter.com/Hgwap0L92m
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 1, 2022
Can you hear #Maheswari the bully laughing at him. Why can’t #Shivin see it. #biggbosstamil6 https://t.co/9bHjhrOluB
— Rooba (@HalleRuba) November 2, 2022
இதை பார்த்த நெட்டிசன்கள் போன்வாரம் தான் உடல் மொழியை கிண்டல் செய்வதற்காக அசீம் வாங்கி கட்டிக்கொண்டார். இந்த வாரம் மகேஸ்வரி மைனா இருவரும் இதுபோல் நடந்து கொள்கிறார்கள் என்று கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் மகேஸ்வரி மைனா இருவரும் பூமர் ஆண்டிகள் என்றும் விக்ரமனை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை பார்த்தால் யார் மீது தவறு இருக்கிறது என்று தெரிந்துவிடும், விக்ரமன் தனது குரல் நியாயத்திற்காக சரியாக குரல் கொடுக்கிறார், ஆனால் மகேஸ்வரி மைனா இருவரும் சந்தர்ப்பவாதிகள் என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.