உசுர விட மானம் தான் பெருசு.! நடிப்பில் மிரட்டி எடுத்துள்ள ஆண்ட்ரியா.! அனல் மேலே பனித்துளி ட்ரைலர்

ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து உள்ளார். கைசர் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பாடகி, நடிகை என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடைசியாக அரண்மனை 3 படத்தில் நடித்தார். தற்போது பெண்களை மையப்படுத்தி இருக்கும் அனல் மேலே பனித்துளி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே மாதம் ஒன்பதாம் தேதியின் நடிகர் தனுஷ் வெளியிட்டு இருந்தார்.

உசுர விட மானம் தான் பெருசு.! நடிப்பில் மிரட்டி எடுத்துள்ள ஆண்ட்ரியா.! அனல் மேலே பனித்துளி ட்ரைலர் 1

விளம்பரம்

ஆண்ட்ரியா தற்போது கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். பிசாசு 2, கா போன்ற படங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பிசாசு 2 படத்தில் திரில்லிங்கான ஒரு ரோலிலும் கா படத்தில் புகைப்பட கலைஞராகவும் அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கீச்சே கீச்சே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருந்தார். தெருக்குரல் அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் பிரச்சனை நீடித்து வந்த நிலையில் இந்த பாடல் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து இருந்தனர். பாடலும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.

தொடர்புடையவை  ஸ்ரேயா கோஷல் மேம்..எப்படி இந்த பாட்டை பாடுனீங்க? ஷ்ரேயாவின் பாடலை அப்படியே பாடி காட்டிய சிவாங்கி

உசுர விட மானம் தான் பெருசு.! நடிப்பில் மிரட்டி எடுத்துள்ள ஆண்ட்ரியா.! அனல் மேலே பனித்துளி ட்ரைலர் 3

விளம்பரம்

இந்தப் படம் நேரடியாக திரையில் வெளியாகாமல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பெண்களை கடத்தி வன் கொடுமை செய்யும் கதையாக இது இருக்கிறது. மானம் என்பது அணியும் ஆடையிலோ, உடம்பிலோ இல்லை.. நாம் வாழுற வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று அதிரடியான வசனங்களுடன் வெளியாகி இருக்கிறது ட்ரைலர். அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Liv

விளம்பரம்

Leave a Comment