ஜிபி முத்து தற்போது நடன இயக்குனர் சாந்தி மாஸ்டர் வீட்டுக்கு சென்று அவருடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல யூட்யூபரான ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவரது ரசிகர்கள் பலரும் இவரை வற்புறுத்தி வந்தனர். டிக் டாக் செயலியின் மூலமாக பிரபலமானவர் உடன்குடியை சேர்ந்த ஜி பி முத்து. டிக் டாக் செயல் முடங்கிய பின்பு இவர் youtube சேனலை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்தனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.!

அந்த கடிதங்களை பிரித்து படித்து அவர்களை திட்டி காமெடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். குறுகிய காலத்திலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் பின் தொடர்பவர்கள் கிடைத்தனர். youtube மூலமாக இவருக்கு வருமானமும் பெருகியது. ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஜிபி முத்துவின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜி பி முத்து. இந்த நிலையில் அவர் பிக்பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ன் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி இருந்த பலரும் ஜிபி முத்துகாகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர்.

அவரும் தொடர்ந்து காமெடிகளை செய்து வந்தார். ஆனால் கடைசி ஒரு நான்கைந்து நாட்களாக அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து கதறி அழுது வந்தார். இது அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. வெளியே வந்த பிறகு சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தற்போது சென்னையில் இருக்கும் அவர் தன்னுடன் பிக்பாஸ்ஸில் இருந்த ஷாந்தி மாஸ்டர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மாஸ்டர் மற்றும் குழந்தைகளுடன் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை சாந்தி மாஸ்டர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil News Live 24×7