பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸ் ஐ நெருங்கி வருகிறது. வெண்பாவிற்கு ரோகித்துடன் திருமணம் முடிந்து விட்டது. பாரதிக்கு டி.என்.ஏ டெஸ்ட் முடிவுகள் வர இருக்கிறது. இந்த நிலையில் தற்போது கண்ணம்மா ஹேமாவிடம் நான்தான் உன் அம்மா என்கிற உண்மையை கூறியிருக்கிறார். பாரதிகண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் பாரதியை கண்ணம்மாவின் தங்கையும் காதலித்து வருவதாகவும், பாரதியை கண்ணம்மா திருமணம் செய்து கொண்டதால் அந்த தங்கையை பின்னர் பாரதியின் தம்பியை திருமணம் செய்து கொண்டு அவரை தொந்தரவு செய்வது போலவும் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கருப்பாக இருக்கும் மருமகளை மாமியார் ஏற்றுக் கொள்ளாதவர் போலவும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது கதை எங்கெங்கயோ போய்விட்டது.

சுமார் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாரதி தனக்கு பிறந்த குழந்தைகளை, தன்னுடைய குழந்தைகளே இல்லை என்று நம்பிக் கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இத்தனை காலமாக காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அவரது தோழி வெண்பாவை திருமணம் செய்து கொள்ளவும் அவர் திட்டமிட்டிருந்தார். இதை கண்ணம்மா தடுத்து நிறுத்தி விட்டார். ஆனால் இன்னமும் பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை. மேலும் குழந்தை ஹேமா தான் அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வரப்பட்டவர். அதனால் தான் பாரதி தன்னை வெறுக்கிறார் என்று ஹேமா மீண்டும் ஆசிரமத்திற்கு என்னை சேர்த்து விடுமாறு கண்ணம்மாவிடம் அழுது புலம்பி கொண்டிருக்கிறார்.

அப்போது கண்ணம்மா நீ அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்துவரப்பட்டவர் இல்லை. இத்தனை நாள் சமையல் அம்மா சமையல் அம்மா என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, நான்தான் உன்னை பெற்ற அம்மா என்று உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். ஒரு வழியாக அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய வருகிறது. விரைவில் அனைத்து உண்மைகளும் தெரியவந்து இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television