பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று நான்காவது போட்டியாளராக ஷெரினா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருந்த ஷெரினாவை இன்று கமலஹாசன் பங்கமாக கலாய்த்து வெளியே அனுப்பி இருக்கிறார். அக்டோபர் ஒன்பதாம் தேதி 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு ஆகிய மூவர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஷெரினா வெளியேறி இருக்கும் தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் தனக்கு தலையில் அடிபட்டு விட்டதாகவும், தன்னை தனலட்சுமி தள்ளி விட்டதாகவும் கூறி நாடகமாடினார் ஷெரினா. இதனால் மக்கள் இவர் மீது வெறுப்பு கொண்டு குறைந்த வாக்குகளை அளித்து தற்போது வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது. ஆங்கிலத்தில் பேசக்கூடாது, வேறு மொழியில் பேசக்கூடாது, மைக்கை மூடிக் கொண்டு பேசக்கூடாது, எழுதிக் காட்டக்கூடாது போன்ற பல விதிகள் இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் பலர் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மாடலான ஷெரினா மற்றும் சீரியல் நடிகையான ஆயிஷா இருவரும் தொடர்ந்து மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருக்கின்றனர். மைக்கை மாட்டாமல் இருவரும் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, பிக்பாஸ் மைக்கை மாட்ட சொல்லி அறிவுறுத்தினார் அப்போது பிக்பாஸ் ஐ பார்த்து இவர் மலையாளத்தில் பேசக்கூடாது என்று சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து இருவரும் மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருந்தனர்.
Appo malayalam la pesa koodathu nu therinje dha pesaringa? Do al the audience look like fools watching the show? Hightime they both get a warning!😡#BiggBossTamil6 #Ayesha #sherina @vijaytelevision will BB not look into this?😒btr 2 snd thm 🏡 so they can talk malayalam happily! pic.twitter.com/oSVcerduht
— Keerthana (@keerthana0409) October 29, 2022
I'm a Malayali, but it felt so wrong to see Ayesha and Sherina talk for too long in Malayalam. It's the utmost disrespect to the audience. I would feel the same if I saw 2 contestants of Malayalam BB carry on a conversation in Tamil. Well done by BB to warn them.#BiggBossTamil6 pic.twitter.com/5wuPFp25h5
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 24, 2022
இது பிக்பாஸை அவமதிக்கும் விதமாக இருந்தது. மேலும் பார்க்கும் ரசிகர்களையும் அவமதிக்கும் செயலாக இருந்தது. பல ரசிகர்கள் இவர்களின் இந்த செயலை திட்டி தீர்க்கத் தொடங்கினர். தமிழ் நிகழ்ச்சிக்கு ஒரு மலையாளியை எடுத்துள்ளீர்கள். அவர் தமிழ் ரசிகர்களை மதிக்காமல் தொடர்ந்து மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி வேண்டுமென்றால் அவர் மலையாள பிக்பாஸுக்கு செல்ல வேண்டியதுதானே என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதும் ரசிகர்கள் கோபத்தில் பதிவுகளை போடத் தொடங்கினர். இந்த நிலையில் இன்று ஷெரினா வெளியேற இருக்கும் நிலையில் அந்த கார்டில் மலையாளத்தில் எழுதிய பெயரை காட்டி பங்கம் செய்து இருக்கிறார் கமலஹாசன். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.