விஜயின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இது ஒரு பாடலை அப்படியே காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் போட்டு கலாய்த்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத பெயர் விஜய். தற்போது அவர் தனது 66-வது படமான வாரிசு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இவர்களுடன் சேர்த்து பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ, பிரபு போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் மோத இருக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே படத்தில் இருந்து பல காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. பல தடைகளை மீறி படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ நேற்று முதல் நாள் வெளியிடப்பட்டது. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற இந்த பாடல் பலருக்கும் பிடித்து போய் பலரையும் முணுமுணுக்க வைத்திருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த நிலையில் நேற்று பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டிருந்தது படக் குழு. வெளியான 2 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் சாதனை புரிந்திருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து மீம்ஸ்களும் ட்ரோல்ஸ்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.
Vaarisu First single track 😍😍 pic.twitter.com/BeJCsb6f4t
— மதுர பாய் 👶 (@maduraiboy0007) November 5, 2022
அடேய் இது நம்ம மொச்சை கொட்ட பல்லழகி ரீமிக்ஸ் version டா 😂😂😂😂😂#Valimai #AK62 #Thunivu pic.twitter.com/LZCnHsfieQ
— NFA😎நம்ம Focus AK😎O+ (@thalathala97) November 5, 2022
😂#Ranjithamepic.twitter.com/HYIkEvMPdB https://t.co/X2I4BbZvWU
— CK |~°π×¶`^°~😪 (@ChandruKanth17) November 5, 2022
இந்தப் பாடலை நடிகர் விஜய்யும் பாடகி மானசியும் இணைந்து பாடியிருந்தனர். இந்த பாடலில் நடுப்பகுதியில் மானசி பாடியிருக்கும் பகுதிகள் அனைத்தும் “மொச்ச கொட்ட பல்லழகி” என்ற பழைய பாடலை அப்படியே காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளதாக நெட்டிசன்கள் வீடியோ ஆதாரத்துடன் போட்டு மரணமாக கலாய்த்து வருகின்றனர். முதன்முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். முதல் படமே இப்படி ட்ரோல்ஸ்களாலும் மீம்ஸ்களாலும் தமனுக்கு அமைந்துவிட்டது. பலரும் தம்மனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் சில ட்ரோல்ஸ்களை நீங்களும் காண..!