பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மயூவை பிடித்து கீழே தள்ளி இருக்கிறார். இதை மயூ தனது தாயார் ராதிகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபியிடம் ராதிகா கோபமாக பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே இரண்டு மனைவி கதைகள் அனைத்து நாடகங்களிலும் இருப்பது வழக்கம் தான். ஆனால் இரண்டு மனைவியை கதையை மையக் கருவாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஒரு நாடகம் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. எவ்வளவு வேலை செய்தாலும் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் வீட்டில் இருக்கும் அம்மாக்களின் கதையை பிரதிபலிக்கும் விதமாகத் தான் இந்த தொடர் எடுக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் இது இரண்டு மனைவி கதையாக நகர்ந்து சென்றது.

கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்த ராதிகாவை, குடும்பஸ்தனாக இருக்கும் கோபி ஒருநாள் சந்திக்கிறார். அப்போது ராதிகாவிற்கும் அவரது முதல் கணவிருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் அவர், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். கோபி ராதிகாவுடன் காதலிப்பதாக நாடகத்தை தொடங்குகிறார். பின்னர் முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இவர்கள் திருமணம் தொடங்கி பல இடங்களில் சண்டைகள் ஏற்படுகிறது. அந்த சண்டைகள் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் ராதிகாவும் கோபியும் நிம்மதி இல்லாமல் இருந்து வருகின்றனர். தற்போது ராதிகாவின் மகளின் மயூ கோபியின் மகள் இனியாவை பள்ளியில் வைத்து சந்திக்கிறார்.

அப்போது மயூ இனியாவை அக்கா என்று கூப்பிட உனக்கு யார் அக்கா உன்னை பார்த்தாலே எனக்கு கோபமாக வருகிறது என்று சொல்லி மயூவை பிடித்து தள்ளி விடுகிறார். இதை தனது தாயார் ராதிகாவிடம் மயூ சொல்லிக் கொண்டிருக்கும்போது, கோபி அங்கு வருகிறார். அவரிடம் மயூ பள்ளியில் நடந்த விஷயங்களை கூறுகிறார். அப்போது இனியா அவ்வாறு தள்ளிவிடும் பிள்ளை இல்லை என்று கோபி இனியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கோபமான ராதிகா கோபியை திட்டுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television