மௌன ராகம் சீரியலின் இன்றைய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்களுக்கு பிடித்தமான ஒரு தொடர் என்றால் அது மௌன ராகம் தான். இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஏதாவது திருப்பங்கள் நடந்தால் அதை உடனடியாக உடைத்து விடுவார்கள். அதாவது சஸ்பென்சை உடைத்து அடுத்த கட்டத்திற்கு கதை நகர்வதால் இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்க்கத் தொடங்கினர். மௌன ராகம் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. சீசன் 2 வில் கதாநாயகர்களாக வருண் தருண் என்ற அண்ணன் தம்பிகளும், அவர்களுக்கு மனைவிகளாக கதாநாயகிகளாக சக்தி மற்றும் ஸ்ருதி நடித்து வருகின்றனர்.

இதில் சக்தி மற்றும் ஸ்ருதிக்கு அப்பா ஒருவர் தான். ஆனால் அம்மாக்கள் வேறு வேறு. சக்தியின் தந்தை கார்த்திக் மிகப்பெரிய பாடகராக இருப்பார். அவர் ஊருக்குச் செல்லும் போது அங்கு மல்லிகாவை சந்தித்து யாருக்கும் தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்வார். அவருக்கும் மல்லிகாவிற்கும் பிறந்தவர்தான் சக்தி. ஒரு கட்டத்தில் மல்லிகா இறந்துவிட்டார் என நினைத்து சென்னைக்கு திரும்பும் கார்த்திக்கிற்கு காதம்பரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள். காதம்பரி ஏற்கனவே ஒருவரை காதலித்து அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் வயிற்றில் குழந்தையுடன் இருப்பதை மறைத்து கார்த்திகை பணத்திற்காக திருமணம் செய்து கொள்வார். பின்னர் அவருக்கு பிறந்த குழந்தை ஸ்ருதியை கார்த்திக்குக்கு பிறந்தது என சொல்லி நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்.

ஆனால் காதம்பரியின் காதலர் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை கார்த்தியிடம் கொடுத்து, ஸ்ருதி தனக்கு பிறந்த மகள் என்பதை நிரூபித்து விட்டார். இந்த விஷயம் இவ்வளவு நாள் கார்த்திக்க்கு மட்டுமே தெரியும். தற்போது சக்தியின் அத்தை சொர்ணத்துக்கும் இந்த விஷயம் தெரிந்து விடுகிறது. இந்த டிஎன்ஏ ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு காதம்பரியின் தந்தை விஸ்வநாதனை பயமுறுத்தி அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறார் சொர்ணம். மல்லிகா மற்றும் சக்தியை கார்த்திக்கின் வாழ்க்கையில் இருந்து எப்படியாவது விரட்டி விட வேண்டும் என்று காதம்பரியும் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் சேர்ந்து சதி செய்து வருகின்றனர். தற்போது கார்த்திக்கின் பிறந்தநாளில் மல்லிகா பாடி விடக்கூடாது என்பதற்காக அவரை கடத்தி வைத்திருந்தனர்.

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சொர்ணம் விஸ்வநாதனிடம் ஸ்ருதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டி பயமுறுத்துகிறார். இதை பார்த்த ஷீலா அந்த விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக மல்லிகா இருக்கும் இடத்தை சொர்ணத்திற்கு காட்டிக் கொடுத்து விட்டார். மல்லிகாவை மீட்டுக் கொண்டு வந்த சொர்ணம் கார்த்திக்கின் பிறந்தநாள் பாட்டியில் அவரை பாட வைத்து விட்டார். இதனால் சக்தி மகிழ்ச்சியில் அவரது அத்தை சொர்ணத்தை புகழ்ந்து கொஞ்சி கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television