‘தளபதி 64’! படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி!!

‘தளபதி 64’! படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி!! 1

விஜய் நடித்து வெளி வர இருக்கும் ‘தளபதி 64’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை சன் டிவி கைப்பற்றி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பெயரிடப்படாத நிலையில், படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 64-வது படம் என்பதன் அடிப்படையில் ‘தளபதி 64’ என அழைக்கப்பட்டு வருகிறது. சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரம்

விஜயுடன் இனைந்து மாளவிகா மோகனன் நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின்ராஜ் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுடெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு முடித்துக் கொண்டு , டிசம்பர் 2-வது வாரத்தில் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று படக்குழு தெரிவி்த்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  மணிரத்னத்தினம் திரை கதை எழுதிய வானம் காட்டட்டும் படம்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்து தொடர்ச்சியாக புகைப்படங்கள், வீடியோக்கள் திருட்டுத்தனமாக வெளியாவதால், படக்குழுவை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, படப்பிடிப்புத் தளத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிஜிட்டல் உரிமையையும் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய் படங்கள் தொடர்ச்சியாக அதிகம் வசூலித்து வருவதால், அதிக விலைக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

விளம்பரம்

Leave a Comment