500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனலெட்சுமி கட்டுக்கட்டாக பணத்தை போட்டு எரிப்பது போன்று ரீல்ஸ் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயதே ஆகும் தனலெட்சுமி. இவரது தாய் குருபகவான் சாரீஸ் என்ற துணிக்கடை நடத்தி வருகிறார். அவரது தந்தை மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். புதுப்படங்கள் வெளியாகும் போது அந்த படத்தில் வருவது போலவே உடையணிந்து, மேக்கப் போட்டு அதை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வந்தார் தனலெட்சுமி. இவரை பின் தொடர்பவர்களும் அதிகம். டிக்டாக் முடங்கிய பிறகு இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் கதை சொல்லும் போது தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அப்பா இல்லாமல் வளர்ந்ததாகவும், அம்மாவின் செயினை விற்றுதான் துணிகள் வாங்கி பிக்பாஸுக்கு வந்து இருப்பதாகவும் அவர் கதறி அழுது கூறினார். ஆனால் ஒரு பேட்டியில் பேசிய தனலெட்சுமியின் நண்பர்கள், தனத்தின் உண்மையான பெயர் சுகி என்றும், அவரின் அம்மா துணிக்கடை நடத்தி வருவதாகவும், பைனான்ஸ்ம் செய்து வருவதாகவும், அப்பா மெக்கானிக் கடை வைத்து இருக்கிறார், அவருடன் ரீல்ஸ் செய்து இருக்கும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் இருப்பதாகவும் தனலெட்சுமியின் நண்பர்கள் பேசியிருந்தனர்.

தொடர்புடையவை  பால் காய்ச்சும் வீட்டில் நடந்த விபத்து.! ப்ரியாவை அழகாக தனது வீட்டிற்கே தூக்கி வந்த ஜீவா.!

500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 3 500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 5 500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 7 500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 9 500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 11 500 ரூபாய் கட்டை அப்படியே எரித்த பிக்பாஸ் தனலட்சுமி..! வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்.! 13

விளம்பரம்

மேலும் இரண்டு படங்களை தனலெட்சுமி சொந்த செலவில் தயாரித்து இருக்கிறார். துணிக்கடையில் MLM முறையில் ஆள் சேர்த்து 89 லட்சம் வரை ஏமாற்றி இருக்கிறார் என்று தனலெட்சுமி மற்றும் அவரது தாயார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது அடுத்த அதிர்ச்சியாக தனலெட்சுமியின் இரண்டு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. முதல் வீடியோவில் 500 ரூபாய் கட்டை கொளுத்தி போடுகிறார். இரண்டாவது வீடியோவில் 2000 ரூபாய் கட்டை அப்படியே கொளுத்தி விடுகிறார். இதை பார்த்தால் டூப்ளிகேட் ரூபாய் நோட்டுக்கள் போல இல்லை. உண்மையான நோட்டுக்கள் போல இருக்கிறது. உடனடியாக தனலெட்சுமியை கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment