பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முதல் வீடியோவை தற்போது மகேஸ்வரி வெளியிட்டு இருக்கிறார். அவரது குடும்பத்தினர் அவருக்கு கேக் வெட்டி அவரை வரவேற்றுள்ள வீடியோவையும், தன்னுடைய வெளியேற்றம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலமாக விஜேவாக அறிமுகமானவர் மகேஸ்வரி சாணக்கியன். 16 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பின்னர் சில சீரியல்களில் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின்பு சீரியல் மற்றும் தொலைக்காட்சிகளை விட்டு முற்றிலும் விலகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் குடும்பத்தினர் தொலைக்காட்சிகளில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டதாலும், தனது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மகேஸ்வரி இருந்ததாலும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாயுடன் வசித்து வருகிறார். தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கும் மகேஸ்வரிக்கு கேசவ் என்ற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 6 செல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கிய நாள் முதலே சண்டை, சச்சரவு என இருந்து வந்தார் மகேஸ்வரி. தொடர்ந்து வீட்டில் கத்திக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்ததால் அடிக்கடி நாமினேஷனுக்கு சென்றார்.

இந்த வாரம் நாமினேஷனில் இருந்தார் மகேஸ்வரி. முதலில் மகேஸ்வரிக்கு வாக்குகள் அதிகமாக இருந்தது. பின்னர் இறுதி நாட்களில் மகேஸ்வரிக்கு வாக்குகள் குறையத் தொடங்கியது. கடைசி இடத்தில் இருந்த மகேஸ்வரியை பிக்பாஸ் நேற்று வெளியேற்றியது. இந்த நிலையில் instagram-ல் அவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தான் வெளியேறியது குறித்து மிக கவலைப்பட்டதாகவும், ஆனால் வெளியே வந்த பிறகு தனக்கு பல அன்பும் காதலும் கிடைத்திருக்கிறது. கடைசி வரை எனக்கு இதே போல் அன்பை கொடுங்கள் என்று சொல்லி அவர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். வெளியே வந்த பிறகு அவரைக் கேக் வெட்டி அவரது குடும்பத்தினர் வரவேற்று இருக்கின்றனர்.