தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் வலம் வந்த மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை எய்தினார். சமீபத்தில் மகேஷ் பாபுவின் தாயார் காலமான நிலையில் தற்போது அவர் தந்தை காலமாகி இருக்கிறார். மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படங்களில் நடித்து வந்தார். பின்னர் 25 ஆவது வயதில் ராஜகுமாரடு என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் மற்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கில் அதிக அளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர் முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதில் ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. போக்கிரி திரைப்படம் அதே பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது. மேலும் இவர் இந்தி திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை மணமுடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலேயே முடித்தார். மேலும் இவர் சூர்யாவின் தம்பி கார்த்தியின் வகுப்புத் தோழர் ஆவார். இவரது தாயார் இந்திரா தேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயற்க்கை எய்தினார்.

இந்த நிலையில் அவரது தந்தை கிருஷ்ணா நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மகேஷ் பாபுவின் தந்தை தாய் அண்ணன் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். இது மகேஷ் பாபு குடும்பத்திற்கு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஆண்டில் தாய், தந்தை, அண்ணண் மூன்று பேரை இழந்த மகேஷ் பாபுவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Polimer News