பாவனியுடன் இணைந்து சன் டிவி சீரியலில் நடித்துள்ள விக்ரமன்.! வைரலாகும் வீடியோ.!

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள விக்ரமன் ஏற்கனவே சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள பாவனியுடன் இணைந்து சன் டிவி நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அரசியல்வாதி ஒருவரை களம் இறக்கி இருக்கிறார்கள். அவர்தான் விக்ரமன். ஆரம்பம் முதலே மிகச்சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். நேர்மையாகவும், நியாயத்திற்கு பக்கமும், யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் எழுப்பியும் வருகிறார். விக்ரமனின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பலரும் விக்ரமனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்ரமன் இந்த சீசனில் வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். விக்ரமன் அரசியலில் சேர்ப்பதற்கு முன்பு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாவனியுடன் இணைந்து சன் டிவி சீரியலில் நடித்துள்ள விக்ரமன்.! வைரலாகும் வீடியோ.! 1

விளம்பரம்

நடிகர் சரத்குமார் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்கிற விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் விக்ரமன் நடித்திருக்கிறார். அந்த வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. 2016ம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் 29 எபிசோடுகளுடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான EMI தவணைமுறை வாழ்க்கை என்ற சீரியலில், பிக்பாஸ் சீசன் 5 இன் போட்டியாளராக வந்து தற்போது பிரபலமாக இருக்கும் பாவனியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அலுவலகத்தில் நடக்கும் கதையை மையப் படுத்தி எடுக்கப்பட்ட இந்த நாடகமும் பாதியிலேயே முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் வேலை பார்த்துள்ளார் விக்ரமன்.

தொடர்புடையவை  மீண்டும் ஜீ தமிழுக்கே திரும்பிய பிரியங்கா நல்காரி.! புது சீரியலின் ப்ரோமோ வெளியானது.!

பாவனியுடன் இணைந்து சன் டிவி சீரியலில் நடித்துள்ள விக்ரமன்.! வைரலாகும் வீடியோ.! 3

விளம்பரம்

தற்போது சீசன் 6ல் ஒரு முக்கியமான போட்டியாளராக இருக்கிறார். அவர் டைட்டிலை வெல்வார் என்று மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள நாடகத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vikatan TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment