பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது திருநங்கை ஷிவினுக்கு காதல் மலர்ந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த சிலர் தன் காதலை, அந்த போட்டியாளரிடம் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே உதாசீனப்படுத்திவிட்டு செல்கிறார் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் புது முயற்சியாக திருநங்கைப் போட்டியாளராக நமிதா மாரிமுத்துவை களம் இறக்கி இருந்தார்கள். ஆனால் அவர் சில காரணங்களால் ஒரு வாரம் கூட நீடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இந்த நிலையில் சீசன் 6லும் அதே போல் ஒரு திருநங்கை போட்டியாளரை களம் இறக்கி இருந்தார்கள். அவர்தான் ஷிவின் கணேசன். சிங்கப்பூரில் படித்துவிட்டு அங்கு வேலை பார்த்து வந்த ஷிவினுக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் யாரிடமும் பேசாமல் தனியாகவே வலம் வந்த ஷிவின் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடத்திலும் பேசத் தொடங்கினார். குறிப்பாக ரட்சிதாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே ரட்சிதாவிடம் தனது காதல் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது தனது தாய் கூறியதால் தனது முதல் காதலை பிரேக் அப் செய்து விட்டதாக ஷிவின் பேசியிருந்தார். மேலும் ஷிவின் நிதானமாகவும் பொறுமையாகவும் விளையாடி வருவதால் விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவர் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டைட்டிலை வெற்றி பெறாவிட்டாலும், அவர் கடைசி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஷிவினுக்கும் விஜே கதிரவன் மீது காதல் வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஷிவின் மறைமுகமாக அதை கதிரவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் கதிரவன் வேண்டுமென்றே எதுவும் புரியாதது போல் தனக்கு புரியவில்லை என்ற பதிலையே அளித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பலர் உண்மையிலேயே திருநங்கைகளின் காதல் வலி நிறைந்தது, அது புறக்கணிக்கப்படும் போது வருகின்ற வலி யாரிடமும் சொல்லி விவரிக்க முடியாது. ஷிவின் எவ்வளவுதான் அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் புரியாதது போல் கதிரவன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்றெல்லாம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#VJkathir knows what #Shivin is trying to tell ….but it seems specifically avoids it …
Part1#BiggBossTamil6 pic.twitter.com/CsyMmdemia
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 14, 2022
End pic.twitter.com/WVYa96TF6s
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 14, 2022
ஏற்கனவே ஷெரினாவுக்கு கதிர் மீது காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு மகேஸ்வரி தனக்கு அவர் மீது ஒரு கிரஷ் இருப்பதாக கூறியிருந்தார். தற்போது ஷிவினும் அதே போல் கதிரவன் மீது கிரஷ் இருப்பதாக பேசி இருக்கும் வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் இவர்கள் இந்த சீசனின் அமீர் பாவனியாக மாறுவார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.